பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே பகலுக்குள் 143 சிந்தித்துக் கொண்டிருந்த பெருமாள், தன்னைமாதிரி ஆட்களுக்கு சிந்தனை ஒரு ஆபத்து என்று உணர்ந்தவர்போல், ஆபீஸர் கோபத்தைச் சரிக்கட்டும் வகையில் டீப்பாயிலிருந்த கூடையை ஒரு கையால் தொட்டார். அடுக்கடுக்காக இருந்த பைல் கட்டுக்களை இன்னொரு கையால் தொட்டார். இரண்டையும் காவடி போல் தூக்கிக் கொண்டார். கூடைக்குள் ஹாட் பாக்ஸ், தெர்மாஸ் பிளாஸ்க், ஒரு வாழை இலை, பீர்பாட்டில் மாதிரியான ஒரு தண்ணிர் பாட்டில். பெருமாள் வாசலுக்கு வெளியே வந்து, அவசர அவசரமாக செருப்பை மாட்டினார். அவருக்குப் பின்னால் வந்த ஆபீஸர், "குயிக். குயிக்..” என்று கத்துவதும், அவரது மூச்சுக்காற்று, தனது காதுக்குள் நுழைவதும் பெருமாளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால், செருப்புகளுக்குள் போன பாதங்களின் பெருவிரல்கள் அவசரத்தில் அதன் வளையங்களுக்குள் நுழைய மறுத்தன. பெருமாள், அதைப் பற்றிக் கவலைப்படாமல் பெருவிரல்களை அந்த வளையங்களுக்குள் மாட்டிக் கொள்ளாமலே, சர்க்கஸ்காரன் மாதிரி பாலன்ஸ் செய்தபடியே நடந்தார். கீழே விழப்போனவர், எப்படியோ தாக்குப் பிடித்துக் கொண்டார். பெருமாள் கீழே வந்ததும், அவர் நின்ற தரையைவிட ஒரு அடி தூக்கலான சிமெண்ட் முகப்பில் நின்றபடியே ஆபீஸர் கம்பீரமாய்க் கேட்டார். 'கார் எங்கே? "அதோ.. அதோ...” "ஏன்? வழக்கம்போல இங்கேயே கொண்டு வந்தா என்ன?” "நாலு நாளா மழையா? இங்கே ஒரே சேறு. முள்ளுச்செடி வேறு விழுந்து கிடக்கு அய்யா. கொஞ்சம் நடந்தா..."