பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 க. சமுத்திரம் எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல் துடித்தது. சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம். ஊதினால் பறக்கும் என்பார்களே, அப்படிப்பட்ட பூஞ்சையான உடம்பு. வெள்ளைக் கண்ணாடி, கருடன் மாதிரி வளைந்த மூக்கு. மனைவி கொடுத்த மாத்திரை ஒன்றை வாயில் போட்டு, அந்த வாய்க்குள் தண்ணிரையும் ஊற்றியிருப்பார் போலிருக்கிறது. பெருமாளைப் பார்த்து, அவர் கத்திய கத்தலில் வாயில் கிடந்த அந்த மாத்திரை வெளியே தெறித்தது. 'ஏன்யா... எத்தனை தடவை உனக்குச் சொல்றது? எனக்கென்னன காது செவிடா? லேசா பட்டனை அழுத்தினாப் போதாதா?” 'இல்லீங்க அய்யா... ஆரம்பத்துல லேசாத்தான் அழுத்துனேன்.” "பொய் வேற சொல்றே.” "அப்படி இல்லீங்க அய்யா. நெசமாவே...” "எதிர்த்து வேற பேசறே.” "மன்னிச்சிடுங்க அய்யா. தப்புத்தான்.” "நடிக்க வேற செய்யறே.” பெருமாள், மேற்கொண்டு பதிலளிக்கவில்லை. போனவராம் இதுக்காகவே காலிங்பெல்லை லேசாகத் தொட்டார். பத்து நிமிடத்திற்குப் பிறகு தற்செயலாய் கதவைத் திறந்த இந்த ஆபீஸர். “உள்ளே ஆயிரத்தெட்டு வேலையில இருக்கேன்... அதோட டெலிபோன் சத்தம். டி.வி. சத்தம். டு இன் ஒன் சத்தம். குழந்தை சத்தம். இந்த மழையின் சத்தம். இந்த சத்தத்துல நீ பாட்டுக்கு லேசா பிடிச்சா என்னப்பா அர்த்தம்?' என்றார். இதற்காகவே மறுநாள் பலமாக அதிகநேரம் அழுத்தினால், "கர்நாடகக் கச்சேரியாக செய்யறே.?” என்றும் சீறினார்.