பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே பகலுக்குள். ஒரு பெண்ணை, முதல் தடவையாகத் தொட்டும் தொடாமலும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு ஆணைப் போல, பெருமாள், அந்த அரசாங்கக் குடியிருப்பில் இரண்டாவதுமாடியில் தெற்கு வீட்டின் கதவுக்கு மேலிருந்த காலிங்பெல்லை பட்டும் படாமலும் தொட்டார். வீட்டுக்குள் நிலைப்படிக்கு மேல் டிரான்ஸிஸ்டர் வடிவத்திலுள்ள ஒரு டப்பா இந்நேரம் கீச்கீச்சென்று இரண்டு தடவையாவது கத்தியிருக்குமென்பதும் அவருக்குத் தெரியும். அந்த எலெக்ட்ரானிக் கருவி மேலுள்ள குருவி படத்திற்கு எற்ப, இதுவும் அசல் குருவியாகக் கத்துவதால், 'ஆபீஸரையா சில சமயம் குருவிச் சத்தத்தை, காலி ங்பெல் சத்தமாகவும். காலிங்பெல் சத்தத்தை, குருவிச் சத்தமாகவும் எண்ணி ஏமாந்து, பிறகு தன்னையே ஏமாளியாக நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொள்வதும் இந்தப் பெருமாளுக்குத் தெரிந்ததுதான். ஆகையால், பெருமாள் கதவு மத்தியில் பொருத்தப் பட்ட லென்ஸ் மாதிரியான கண்ணாடியில் வலது கண்ணைப் பதித்தார். ஆள் நடமாட்டம் தெரிந்தது. பெருமாள் காத்திருந்தார். ஒரு நிமிடம். ரெண்டு. மூணு. ஐந்து நிமிடங்கள். அந்தச் சமயம் பார்த்து மாடிச்சுவர் விளிம்பில் உட்கார்ந்து கத்திய ஒரு சிட்டுக்குருவியைத் துரத்திவிட்டு, மீண்டும் காலிங்பெல்லை அழுத்தினார். கால் நிமிடம்வரை கையை அதிலேயே வைத்திருந்தார். முகத்தில் அறைவதுபோல் கதவு திறக்கப்பட்டது. திறந்த வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்த கவர்மென்ட் கதவு, அதைத் திறந்தவரை மாதிரியே ஆடியது. வீட்டுக்காரருக்கும் முகம்