பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 க. சமுத்திரம் தொடத் துக்கம் வந்தது. அவனைக் கட்டிபிடித்து கதறவேண்டும் போல் தோன்றியது. ரங்கன் பெட்டியை விழப்போட்டு கட்டிலில் கிடந்த சிகரெட்டையும் வத்திப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்தான். கவர் மூலையில் சாய்ந்தான். தன்னையறியாமலேயே சிகரெட்டைப் பற்ற வைத்தான். ஊதினான். அவன் தலைக்குமேல் புகை வட்ட வட்டமாய்ச் சுழன்று கோடு கோடாய்ப் பிரிந்து அரும்பரும்பாக அற்றுக் கொண்டிருக்க ரங்கன், ஒரேயடியாய் புகைந்துக் கொண்டிருந்தான். குமுதம், 1982 ©