பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம் 139 ரங்கன், ஆவேசியானான். திடீரென்று அவர்களை தாக்கினான். வரதனின் வயிற்றில் விட்டான் ஓர் உதை. சிவராசனின் தலைமுடியைப் பிடித்துச் சுவரில் மோதவைத்தான். அவர்கள் இருவரும் என்னடா, என்னடா, என்று சொல்லிவிட்டு பின்னர் தற்காப்பிற்காக அவனைத் திரும்பித் தாக்கப் போனபோது. ரங்கன் பொத்தென்று தரையில் உட்கார்ந்து, தன் தலையிலேயே மாறி மாறி அடித்துக் கொண்டான். தலையை கட்டில் சட்டத்தில் மோதிக் கொண்டான். சட்டைப் பையில் போற்றிப் பாதுகாத்து வந்த கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்து அங்குமிங்குமாகச் சிதறடித்தான். பிறகு தன் பாட்டுக்குப் புலம்பினான். "ஆசை காட்டி மோசம் செய்திட்டிங்களேடா பாவிங்களா! நான் கட்டின கோட்டையே, எனக்கு சாமாதியாயிட்டதே. ஒரு வருட கணக்கில இதயத்தில் இருந்தவளை, ஒரு வாரமாய் என் உடம்புல ஒவ்வொரு அணுவிலேலயும் வியாபிக்க வச்சிட்டு, இப்போ என்னை அணுஅனுவாய்க் கொன்னுட்டிகளே கண்ட கண்ட பெண்களைக் கண்ணால மேயுற உங்களுக்கு காதலப் பற்றி என்னடா தெரியும்? நடக்கிறது நடக்கட்டும். இப்பவே ஊருக்கு போய் உண்மையை சொல்ல போறேன். என்னை அடித்துக் கொன்றால், அவள் விடும் ஒரு சொட்டுக் கண்ணிர் எனக்கு பால் வார்க்கிறது மாதிரி அப்படியே அவள் கண்ணிர் விடாட்டாலும், அவளால் சாகிறதாக நினைக்க மாட்டேன். அவளுக்காகச் சாகிறதாக நினைப்பேன். இதுக்கு பேருதான்டா காதல். வழிவிடுங்கடா” பையைத் துாக்கியபடி முண்டியடித்த ரங்கனை நண்பர்கள் முதலில் தட்டிக் கொடுத்து கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவர்களால் வியப்பிலிருந்து விடுபட முடியவில்லை. விவகாரம் இப்படி ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை. அவனைத் தொடத்