பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 க. சமுத்திரம் "ஊருக்கா? ஊர்ல் என்னடா இருக்கு?” "ஏதோ இருக்கு. எனக்குப் பிடிச்சது பிடிபட்டு இருக்கு." "என்னடா மூடு மந்திரம்? எதுக்காக இப்போ ஊருக்கு? வரதன், சிவராசன் விட்ட இடத்தைத் தொடர்ந்தான்: "விஜயவாபைப் பார்க்கவா? அவள் எழுதிய காதல் கடிதத்திற்கு நேரில் பதில் சொல்லவா?” ரங்கன், ஆச்சரியப்பட்டான். நண்பர்களிடம் தானும் விஜயாவும் நடந்து கொண்ட விதத்தை பல தடவைச் சொல்லி இருக்கிறான். ஆனால் கடிதம் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்? வரதன் அட்டகாசமாய்ச் சிரித்தபடி பேசினான். “மடையா! ஊர்ல உதை வாங்கவா போறே? நீ விஜயாவுக்கு எழுதின லட்டர், அவள் அப்பன் கிட்ட சிக்கியிருக்கு. அவள், தனக்கு எதுவும் தெரியாதுன்னு அழுதிருக்காள் அப்பன்க்காரர் மீனை எதிர்பார்த்து இருக்கிற கொக்கு மாதிரி வேல்கம்போடு, ஒனக்காகக் காத்திருக்கான். சிவராக, தன் பங்குக்கு சிரிக்காமல் கோபமாகவே கேட்டான். 'மூளை இருக்காடா ஒனக்கு? வந்த தபால் உறையில் முதல்ல தபால் முத்திரையைப் பார்த்தாயா? எங்க கிட்ட நீ அப்பப்போ புலம்பனதை நோட் பண்ணி நாங்கதான் அந்த லெட்டரை எழுதினோம்! நீ எங்ககிட்டே கேட்காமல் ஏண்டா அவளுக்கு எழுதின? அப்படி அவள் என்ன கிளியோபாட்ராவா? இந்நேரம் எவன் கிட்ட பல்லைக் காட்டிச்சிரிச்சிட்டிருக்கிறாளோ" சிரித்த நண்பர்கள், திடீரென்று பிரமித்துப் பின்வாங்கினார்கள்.