பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம் 137 ஏழு மணி வரைக்கும் கிடந்து வெயில் உறைப்பில் எழுபவன், பக்கத்துத் தெருவில் இன்னும் பிரியாணி போடும் பருவத்திறகு வராத இளஞ்சேவலின் கூவலில் எழுந்தான். எங்கேயும் எப்போதும் எதிலும் ஒன்றே ஒன்று. விஜயா. விஜயா. விஜயா. அவளைக் கட்டிப் பிடிக்க வேண்டும் என்ற கற்பனை வரவில்லை. முத்தமிட வேண்டும் என்று உதடுகள் முனங்கவில்லை. இனந்தெரியாத உணர்வு. உண்ணும்போதும் உறங்கும்போதும், எண்ணும்போதும், எழுதும்போதும், எப்போதும் விஜயாவோடு இருக்கவேண்டும் என்ற அவா. பெளதிக விதிகளுக்குக் கட்டுப்படாத ரசாயன விதி. ஒரு வாரம் ஓடியது. மறுவாரம் பிறந்தது. ரங்கன், விஜயாவிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தான். திங்களில் அவா, செவ்வாயில் எதிர்பார்ப்பு, புதனில் ஏமாற்றம், வியாழனில் கலக்கம், வெள்ளியில் நடுக்கம், சனியில் வேதனை. விஜயா ஏன் கடிதம் எழுதவில்லை? ஒருவேளை கடிதம் விஜயாவிடம் போகாமல், அவள் தந்தையிடம் போயிருக்குமோ? தபால்காரர் கடிதத்தைத் தாமதமாய்க் கொடுத்திருப்பாரோ? அப்படியே இருந்தாலும் விஜயா விவரமாய் எழுதி இருக்கலாமே. எப்படிச் சொல்ல முடியும்? மானத்தை வேல் கம்பாலும் வெட்டரிவாளாலும் எடைபோடும் அவள் தந்தை, அவளை வீட்டோடு சிறை வைத்திருந்தால்? என்னால்தானே இந்தச் சிரமம். . ‘என்ன ஆனாலும் சரி, ஊருக்குப் போய் அவளைப் பார்த்தாகணும் என்று தீர்மானித்தான். ரங்கன் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்கு சம்பளம் இல்வாத விடுமுறை போட்டுவிட்டு, கிளம்பினான். வரதனும் சிவராசனும் லெதர் பேக்கை துரக்கியபடியே நின்ற ரங்கனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். சிவராக அதட்டிக் கேட்டான். "எங்கேடா போற?” “ஊருக்கு”