பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 க. சமுத்திரம், எடுத்தாலும் கடிதத்தில் கூடாது. அடையாறுக்குப் போய் போடலாம். அடையாறு வந்தான். அதற்குள் போஸ்ட் ஆபீஸ் முடியாகிவிட்டது. மொபைல் வண்டி ஆறு பத்துக்கு வரும் என்றார்கள். மொபைலை எதிர்பார்த்து இம்மொபைலாக நின்ற கூட்டத்தில் கலந்தான். ஒரு சின்னச் சந்தேகம். இந்த லெட்டர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்ஸில்தான் போகணும். அது ஏழே காலுக்குப் புறப்படு கிறது. ஆறு பத்துக்கு வந்து ஆறு நாற்பதுக்கு புறப்படும் மொபைல் வண்டியில் போட்டால் எக்ஸ்பிரகக்கு எப்படிப் போய்ச் சேரும்? பேசாமல் ரயில்வே ஸ்டேஷனுக்கே போய்ப் போட்டுவிடலாம். வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி எழும்பூர் என்றான். அவன், தன் அறைக்குத் திரும்பும்போது மணி இரவு பத்துக்கு மேலாகிவிட்டது. அறைக்கு வெளியே முழங்காலில் தலை வைத்து அசல் ஓணான்கள் மாதிரி உட்கார்ந்திருந்த வரதனும், சிவராசனும் அவன் கைகளைப் பிடித்து ஆளுக்கு ஒன்றாகத் திருகினார்கள். ரங்கன் சிரித்தான். வலிக்கவில்லை. விஜயாதான் அவன் கரத்தைத் தடவி விடுகிறாளே! ரங்கன் மதர்ப்பாகப்படுத்தான். அதிசயமான சாதனையைச் செய்துவிட்ட அளவிட முடியாத திருப்தி. அவள் காதலுக்கு, தான் தகுதியுள்ளவனாகிவிட்ட தன்னம்பிக்கை. அடைய முடியாத ஒன்றை அடைந்துவிட்ட பெருமிதம். அதேசமயம், 'லெட்டர் அவள் கையில் கிடைக்காமல் போனால்? என்று அப்பப்போ உதறல்கள். ரங்கன், சிகரெட்டை அடியோடு அல்ல, அடி முதல் நுனிவரை விட்டு விட்டான். போதாக்குறைக்கு, புகைத்த நண்பர்களை, “வெளியில் போய்ப் பிடிங்கடா ஒரே வாடை” என்று பகைத்தான். படியாத தலை முடி படிந்தது. ஏறாத பவுடர் ஏறியது. தலை முழுக்கப் போர்வையை முடிக்கொண்டு காலையில்