பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம் 135 நிஜமான காதலைக் காட்டிய அவனுக்கு, எழுத்தில் தடை வரவில்லை. கால் மணி நேரத்தில் இரண்டு பக்கங்களை காதல் விழுங்கிவிட்டது. அவள் விட்டு வைத்திருந்த இன்னும் சில காதல் சமிக்ஞைகளை நினைவுப்படுத்தி எழுதினான். இறுதியாக, 'உன்னை நான் நினைக்கவில்லை என்று கூடச் சொல்வேன். மூச்சு விடுவதையும் இதயத் துடிப்பையும் நினைத்துக் கொண்டா இருக்கிறோம்? என்று முத்தாய்ப்போடு முடித்தான். அப்படியும் இப்படியுமாய்மணிமாலை நாலரையாகிவிட்டது. இப்போது போஸ்ட் செய்தாக வேண்டும். கடிதத்தை வைத்தபடி அறையைப் பூட்டப் போனான். நண்பர்கள் தத்தம் நகல் சாவிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்லாமல் அவசரத்தில் அறையிலேயே வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன செய்யலாம்? பரவாயில்லை. ஒரு லெட்டர் போஸ்ட் செய்துவிட்டுத் திரும்ப எவ்வளவு நேரம் ஆகும்? அறையைப் பூட்டிவிட்டு, தெருவாசியான ரங்கனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். இன்று வியாழக்கிழமைதான். வழக்கமாய் இரண்டு நாளாகும் தபால் போக. ஆனால் தப்பித் தவறி, இது மறுநாளைக்கே அங்கே போய்ச் சேர்ந்து விடுமோ? நாளை போஸ்ட் பண்ணினால்? தாமதமாகி விடவும் கூடும். 'அக்ளபப்ட் யுவர் லவ்-ஸெயிலிங் இன் தி சேம் போட்' என்று சனிக்கிழமை காலையில் தந்தி கொடுத்துவிட்டால் என்ன? நோ, நோ. தந்தி என்றால் கிழவிகள் ஒப்பாரி வைப்பார்கள். அதுவே அவர்கள் காதலுக்கும் சுடுகாடாகும். ஒரு மணி நேர யோசனைக்குப் பிறகு, அன்றைக்கே போஸ்ட் செய்வது என்று முடிவு செய்து சிறிது தூரம் நடந்து தபால் பெட்டியைத் தொட்டுவிட்டான். அதன் வாய்க்குள் கடிதத்ப்ை போடப் போனவன், திடீரென்று கையை வெளியே எடுத்தான். இந்த ஒதுக்குப் புறப்பகுதியில் கடிதங்களை எப்போது வந்து எடுப்பார்கள் என்பதே தெரியாது. ரிஸ்க் எதற்கு? காதலில் ரிஸ்க்