பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. க. சமுத்திரம் என்கிறேன். புரிந்து கொண்டவர்போல், அப்பாவுடன் சென்ற நீங்கள், என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்கள். எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. உங்கள் கம்பெனி முகவரியைக் கண்டுபிடிக்க நான் பட்டயாடு இதற்கே எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுக்கலாம். 'காதல் திலகி என்று நீங்களே கொடுத்துவிடுங்களேன். நமது ஊர்க்காரர்களான வரதனும், சிவராசனும் நீங்களும் ஊரில் ஒன்றாகச் சுற்றியதுபோல் ஒரே அறையில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஒரு சின்ன வேண்டுகோள். சிகரெட் அதிகம் பிடிக்காதீர்கள். முடிவாக என்னை நீங்கள் காதலிக்கவில்லை என்றால், என்னை இந்தக் காகிதமாக பாவித்துக் கிழித்துவிடுங்கள். நீங்களும் காதலிப்பதாக இருந்தால், அடுத்த சனிக்கிழமை என் கைக்குக் கிடைக்கும்படி கடிதம் எழுதுங்கள். அன்று அப்பா வெளியூர் கலயாணத்திற்குப் போகிறார். அண்ணா எட்டாவது தடவையாக இண்டர்வியூவிற்குப் போவான். எனக்குக் கல்லூரித் தோழிகள் கடிதம் எழுதுவதுண்டு, ஆகையால் அம்மா சந்தேகப்பட மாட்டாள். இது ஒத்திகை பார்த்து எழுதிய கடிதமல்ல. கண்ணில் ஒற்றி எழுதிய கடிதம். முத்தங்களுடன் முடிக்கும் அன்பு விஜயா. ரங்கன் கடிதத்தை மார்புடன் அணைத்தபடி மெய்மறந்து நாற்காலியில் சாய்ந்தான். பிறகுதான் அவனுக்கு அன்றைக்கு பதில் எழுத வேண்டிய நாள் என்பது ஞாபகம் வந்தது. வாசல் கதவை இன்னொரு தடவை செக்கப் செய்துவிட்டு பேனாவைத் துக்கினான்.