பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம் 133 கொள்கிறீர்கள். நான் சீக்கிரமாய் வந்த சிரிப்பை அடக்கியபடியே, நேரம் தெரியவியா? இல்ல, ஒரு வேளை நேரம் சரியில்லையா? என்றேன். நீங்கள் விழுந்தடித்து மீண்டும்.மீண்டும் ஊரைத் திரும்பிப் பார்த்தபடியே ஓடினர்கள். காதலர்களுக்கு, வார்த்தைகள் ஸ்வீட் ருத்திங்ஸ்தான். இருந்தாலும் நீங்கள் கொடுத்த ஸ்வீட்டுக்குப் பிறகு காரம் வேணுமென்று நான் சமையல்காரி மாதிரி நடந்து கொண்டது தப்புத்தான். இதற்குப் பிராயச்சித்தம் செய்வதுபோல் உங்கள் வீட்டுக்குப் பக்கமாக நடமாடினேன். அழுமூஞ்சியிலும் சிடுஞ்சியான உங்கள் தங்கையிடம், குமுதம் இருக்குதா என்று உங்கள் வீட்டுக்கு வந்தே கேட்டேன். அவளோ, வாங்கிப் படியேன்” என்றாள். நான் சிரித்து மழுப்பினேன். உங்க அண்ணாவுக்கு வேலை கிடைக்கலையா? என்றேன். அவளோ, உங்க அண்ணனுக்கு கிடைக்குதான்னு பாரு முதல்ல. அவருக்கே கிடைக்காதபோது எங்கண்ணாவையா இளக்காரமாய்பேசறே? என்று சண்டைக்கு வந்தாள்.அவள் குட்டக் குட்டக் குனிந்தேன். யாருக்காக... எதற்காக? உங்கள் தலையில் செல்லமாகக் குட்டவேண்டு என்ற லட்சியம்தானே? பாம் உங்களக்க ே கிடைத்துவிட்டது. சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். உங்கள் தெருவிற்கு குழாய்த் தண்ணிர் பிடிக்கும் சாக்கில் வருகிறேன். நீங்கள் சாளரம் வழியாய் என்னையே பார்க்கிறீர்கள். வரிசையின் முன்னணிப் பானையா இருந்த என் பாத்திரத்தை இதர பானைகளுக்காக விலக்கி வழிவிட்டு அரைமணி நேரம் உங்களையேய பருகுகிறேன். ஞாபகம் இருக்கிறதா அத்தான்! சென்னைக்குப் புறப்படுகிறீர்கள். ரயில் நிலையத்தை நோக்கி நடக்கும் உங்கள் பின்னால், ஏதோ ஒரு சாக்கில் நானும் நடக்கிறேன். வழியில் போன காமாட்சிப் பாட்டியைப் பார்த்து, 'பாட்டி, மெட்ராஸுக்கு மகள் வீட்டுக்குப் போரீங்களாமே? என்னை மறந்துடாதீங்க. நான் எப்பவும் உங்க பேத்திதான்.'