பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|32 க. சமுத்திரம் சமயம், ஆசையை, அதற்கு உரியவரிடம்தானே தெரிவிக்கிறோம் என்று தெளியும்போது சிரிப்பு வருகிறது. உங்களுக்கு ஞாபகம் வருகிறதா அத்தான்? கல்லூரிகளில் வெவ்வேறு சமயங்களில் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விடப்பட்ட விடுமுறைகளால், மூன்று வருடங்களாகச் சந்திக்காத நாம், கிராமத்து கரும்புத் தோட்டத்திற்கு அருகே சந்தித்தோம். உங்களோடு ஒட்டிக் கொண்ட ஒங்களின் பத்து வயது அக்கா மகனைப் பார்த்து நான், ‘என்னடா ஆளே அடையாளம் தெரியல? என்றேன். நீங்கள் என்னை உற்றுப் பார்த்தது உண்மைதான். ஆனால் ஒரு வார்த்தை நீயுந்தான் என்று சொன்னிர்களா? இன்னொரு நாள். நீங்கள் டவுனுக்கு பிரமாதமாய்ப்போய்க் கொண்டிருந்தீர்கள். குளத்தில் குளித்துவிட்டு, கமதியோடும் வளர்மதியோடும் வந்த நான், மஞ்சள் சட்டையும் சிமெண்ட் கலர் பேண்டும் பளபளக்க, வார்த்தெடுத்த இரும்புபோல் கருட்டைத் தலையோடும் சொக்க வைக்கும் முகத்தோடும் போன உங்களிடம் கிறங்கிப்போய், யாராவது அழகாய்மாறனுமுன்னால் இந்த ஊர்ல நாலு வருடம் இருக்கப்படாது. அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அடிக்கடி குற்றாலத்தில் போய் குளிக்கணும் என்றேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்கள் திரும்பிப் பார்த்தீர்கள். யாரை? வளர்மதியை! நல்லவேளை அவள் உங்களுக்கு சொந்த சித்தி மகள் என்பதால் எனக்கு நிம்மதியாயிற்று. இன்னொரு முக்கியமான இடத்திற்கு வருவோம். அந்தி சாய்ந்த வேளை. எங்கள் புளியந்தோப்பில் இருந்து நான் மேற்கு நோக்கியும், நீங்கள் கிழக்கு நோக்கியும் நடக்கிறோம். நான் உங்களைக் கண்டவுடனேயே, கைகளைப் பிசைந்தபடி தவழ்வதுபோல் நடக்கிறேன். நீங்களோ ஊரைத் திரும்பித் திரும்பி பார்த்தப்படியே வருகிறீர்கள். இருவரும் சந்தித்தபோது, நீங்கள் கடிகார கையை ஆட்டியபடியே, 'இப்போ மணி என்ன இருக்கும்' என்று அழாக் குறையாகக் கேட்டு முகத்தைத் துடைத்துக்