பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம் 13} சாம்ராஜ்யத்தின் பவளக்கொடி. ஒரு வருட காலமாக வயல் வெளியிலும் கிணற்றடியிலும் கோவில் முனையிலும் உண்ணா விரதம் இருந்து பெற்ற காதல் கொடி தேசீயக் கொடியைப் போல் மாலையில் இறங்காமல், உயரத்தில் பறக்கவிடப்படும் அன்புக் கொடி. எங்கள் மீண்டும் கடிதத்தை மார்புக்கு நேராகப் பிரித்தான். காகிதம் கசங்குவது போலிருந்தது. உடனே சிறிது மென்மையாக விட்டுப் பிடித்தான். "அன்புள்ள அத்தானுக்கு, நலம். நலம் அறிய அவா. என்னடா, இந்த விஜயா எடுத்த எடுப்பிலேயே அத்தான் என்கிறாளே என்று யோசிக்கிறlர்களா? யோசியுங்கள். உங்களைக் காதலிக்கிறவள் என்ற வகையில் மட்டும், நீங்கள் எனக்கு அத்தானில்லை. உங்கள் அம்மாவோட பாட்டியின் பெரியத்தான் மனைவி, எங்கள் குடும்பத்தில் பிறந்தவளாம். ஆக, கற்றி வளைத்துப் பார்த்தாலும் நீங்கள் எனக்கு அத்தான்தான். 'சுற்றி வளைத்து என்ற வார்த்தையின் பொருள் புரிகிறதா? எனக்கு, அது புரியப் புரிய, மனம் அல்லாடுகிறது. வெட்கம் வெட்கமாய் வருகிறது: இதோ வெட்கம் போய் இப்போது பயம் வருகிறது. ஒருவேளை நான் எதிர்பார்ப்பதுபோல் நீங்கள் என்னைக் காதலிக்காமல் இருந்தாலும் இருக்கலாமோ என்ற பயம்." ஆமாம் அத்தான் தெரியாமல்தான். கேட்கிறேன். விரும்பிய பெண்ணிடம் ஓர் ஆடவன்தான்,தன் விருப்பத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என்பது உலக ரகசியம். ஆனால் காத்திருந்து, காத்திருந்து கண்ணெல்லாம் நீர்நிறைந்து, இப்போது நானே நாணத்தை விட்டு ஆசையைத் தெரிவிக்க வேண்டியது இருக்கிறதே என்பதை உணரும்போது, என் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. அதே 10