பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 க. சமுத்திரம் வரதன் அதட்டினான். 'ஏண்டா, நீ வாரதுவரைக்கும் காத்திருந்து ஒனக்கு ஸ்பெஷல் ஷோ காட்டப் போறதாய் நினைப்பா? புறப்படுடா! டேய், ஒன்னைத்தான். ஒனக்குக் காதலிக்கத்தான் தெரியாது. எங்களோட காதலை ரசிக்கவும் பிடிக்காது. நிழல் காதலையாவது வந்து பாருடா. எழுந்திருடா சண்டி மாடு” ரங்கன் மெல்லச் சிரித்தபடி நண்பர்களைப் பார்க்காமலே நாவசைத்தான். "நான் சினிமாவுக்கு வர்ல." “என்ன... வர்வியா? உனக்கும் சேர்த்து என் கையிலே இருந்து காசைக் கொட்டி ரிசர்வ் பண்ணியிருக்கேன், ஒப்பன் வீட்டுப் பணமுன்னா இப்படிச் சொல்வியா?” "எப்பன் வீட்டு காசுன்னாலும் வரமாட்டேன்.” "சிவராக! வாடா போகலாம். டேய் ரங்கா, ஒன்னை வந்து கவனிச்சுக்கிறோம்." நண்பர்கள் போய்விட்டார்கள். ரங்கன் அறைக்குள் வந்தான். கதவைத் தாளிட்டான். எவராவது உள்ளே வரலாம் என்பதுபோல், அனுமானித்து வாசலுக்கு கதவால், தடைப் போட்டான். அலுவலக மேஜை டிராயரில் பூட்டி வைத்து, மீட்டு வந்த காகித உறைக்குள்கையை விட்டான். கறுப்புமை பூசிய காகிதத்தை எடுத்தான். மார்புக்கு நேராக அதை வைத்துக் கொண்டு படிக்கப் போனான். மின் விசிறியால் அது பரபரப்படைந்தது. உடனே அது கிழிந்து விடக் கூடாதே என்று பயந்து ஸ்விட்ச் போர்ட் பக்கம் போனான். இந்த இடைக்காலத்தில் காகிதம் பறந்துவிடக் கூடாதே என்று மீண்டும் மேஜைக்கருகே தாவினான். கடிதத்தின் வாசகம் மனப்பாடந்தான். அதற்காகக் கடிதத்தை விட்டுவிட முடியுமா? அது வெறும் கடிதம் அல்ல. அவன் காதல்