பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு காதல் கடிதம். ஆடை அலங்காரத்தின் உச்சக்கட்டமாக இரண்டாவது மாடியில் ஒண்டி போர்ஷனில் தெற்குப் பக்கம் உள்ள ஜன்னலுக்கு வகிடெடுத்ததுபோல் தோன்றிய இரண்டு செங்குத்தான கம்பிகளுக்கு இடையே, கட்டங்ககட்டமாக முடிந்த நடுப்பகுதியில், நடுப்பக்கத்துக் கட்டத்தில் சதுரக் கண்ணாடியை சாத்தி வைத்துவிட்டு,சிவராசன், முகத்திற்குப்பவுடர் தடவும் சாக்கில் முதல் மாடியில் இரண்டாவது போர்ஷனில் இருக்கும் ஒர் இளசைப் பார்த்தான். அதே அறையில் அதே சமயம் கிழக்குப் பக்கம் இருந்த குறுகலான ஜன்னலில் கையளவு கண்ணாடியை பிரித்தபடியே கிரவுண்ட் போர்ஷனில் வாழும் அல்லது காதலில் வாடும் ஒருகடலளவு கண்ணினாளை,வரதன்கையில் எடுத்தஸ்னோவைக் காதில் தேய்த்தபடி பார்த்தான். "டேய், கண்ணாடியை பார்க்கிறியா இல்ல கண்ணாடியை பாக்கிறியா? எவ்வளவு நேரண்டா? நானும் இவளைப் பார்க்கப்படாதா? புறப்படுடா?"என்று சிவராசனை, வரதன் சாடினான்.” “ஒன்னால அவளைப் பாக்க முடியவன்னா நானும் இவளப் பார்க்கப்டாதா? ஏண்டா இந்தப் பொறாமை புத்தி?” அந்த அறைக்குள், மூன்றாவது இளைஞனான ரங்கன் சிவராசனை ஏறிட்டுப் பார்க்காம தனக்குள்ளேய பேசியபடி தனக்குள்ளேயே சிரித்தான்.