பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 க. சமுத்திரம் 'உலகத்தில் எல்லோருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர், தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் காணும்போது, அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு.கய-குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது ஈத் தடுக்கிறது. ஈகோ' அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட நினைக்க வைக்கிறது. இதே குறைகள், இன்னொரு மனிதனிடம் பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப் பகைவனாய் கருதுகிறான். வெறுப்பதன் மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால்தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னார்கள். திருமூலர், மரத்தை மறைத்தது மாமத யானை' என்றதுக்கும், சாக்ரடீஸ் ‘உன்னையே நீ அறிவாய்' என்று சொன்னதுக்கும், பைபிளில் 'உன்னைப்போல் மற்றவனை நேசி' என்று சொன்னதுக்கும் இதுதான் காரணம். பிறரை வெறுக்கும் ஒருவன், தன்னே சோதித்துக் கொள்ள வேண்டும்.” கந்தரம் யோசித்தான். மானேஜர் சதாசிவத்தின் நடை உடை பாவனைகள், தன்னைப் போலவே அமைந்திருப்பது அப்போதுதான் உறைத்தது. தான், மானேஜராக இருந்தால் சதாசிவம்போல்தான் நடந்திருக்க முடியும் என்பதும், அவன், தன் நிலையில் இருந்தால், அவனும் தன்னைப்போல்தான் நடந்திருப்பான் என்பதும் புரிந்தது. விவகாரம் பதவிக் கோளாறு அல்ல மனிதக் கோளாறு என்பதும் கண்கெட்டு உறைத்து. அண்ணா - பொங்கல் மலர், 1982 (>