பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு 127 'எருமைமாடு எழுதின ஸ்கிரிப்டைவிட டைரக்ஷன் எவ்வளவோ மேல்.’ "டேய் என்னடா நினைச்சிக்கிட்டே?” "டாய். என்ன நினைக்கணுங்குறடா?” "இப்படி பேசினா பல்லை உடைப்பேன்" "இதோ நானே உடைக்கிறேன் பாரு” ஊழியர்கள், இருவரையும் விலக்கிவிட்டார்கள். பிறகு இரண்டு கோஷ்டிகளாகி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். நாடகம் போடாமலே அங்கே சண்டைக் காட்சிகள் நிறைந்த, நாடகம் ஒன்று தத்ரூபமாக அரங்கேறியது. விவகாரம், மானேஜிங் டைரக்டர் தனபாலுக்கு மட்டுமல்ல, பத்திரிகைகளுக்கும் போய்விட்டது. இப்போது சதாசிவமும், கந்தரமும் இடைகால பணி நீக்கத்தில் இருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக யாரை போடுவது என்பதில் ஒரு பணிபோர் நடப்பதால், இன்னும் விசாரணை தொடங்கவே இல்லை. சாம்பசிவம் எப்படியோ. சுந்தரத்திற்கு அடி மேல் அடி. மனைவியின் ஊமை குகம்பில், மாமனார், மாமியார் கரித்துக் கொட்டல். அவன் அதிகாரி. எப்படியும் தப்பிச்சுக்குவான். நீ வெறும் அகெளவுண்டன்ெட்டு, உனக்குத்தான் வேலை போகும் என்ற அப்பாவின் ஜோசியம், இதனால், சுந்தரத்திற்கே, தனது அனுகுமுறையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், புத்திசாலி என்பதால், ஒரு மனோ தத்துவ நிபுணரை சந்தித்து, தனது வரலாற்றை ஆதியோடு அந்தமில்லாமல் ஒப்பித்தான். அவர், அவன் மனோ பிரச்சனையை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றாலும், அந்த விவகாரத்தின் காரண காரியங்களை கண்டு பிடித்தவர்போல், ஒரு கண்டு பிடிப்பாளருக்கு உரிய கர்வத்தோடு தெரிவித்தார்.