பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 க. சமுத்திரம் சதாசிவமும், நாடகத்தை, அவன் டைரக்ட் செய்ய 'பெருந்தன்மையோடு சம்மதித்தான். ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாற்றங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. அவனால், கத்தாமல் இருக்க முடியவில்லை. "நிறுத்துங்க. இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது." அக்கெளன்டன்டும், நாடக டைரக்டருமான கந்தரம் விடுவானா? விடவில்லை. "சொல்லுங்களேண்டா.. ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு.” "அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?” "எல்லாக் காட்சியும் மட்டாக இருந்தால், என்ன பண்றது? "என் ஸ்கிரிப்டா மட்டம். நான்சென்ஸ், டைரக்ஷன்தான் மகா மட்டம்” “என் டைரக்ஷனா? இடியாட்டிக்... மட்டமான ஸ்கிரிபடையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்ஷன் ஒரு உதாரணம்”, "மிஸ்டர் சுந்தரம் நீ ரொம்பத்தான் பேசுற" "மிஸ்டர் சதாசிவம்: இங்க நீங்கமானேஜர் இல்ல. ரைட்டர். நான் அக்கெளண்டண்ட் இல்லே. டைரக்டர். டோண்ட் பீவில்லி” "வார்த்தையை அடக்கிப் பேக. இந்த மாதிரி டைரக்ஷன் பண்ணியிருக்கியே. இதைவிட நீ எருமை மாடு மேய்க்கலாம்.”