பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு 125 கந்தரத்தின் 'ஸ்கிரிப்டை சதாசிவம் படித்தான். அவனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, அந்தக்கம்பெனிலிலேயே தனக்குமட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய கந்தரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும், ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் கு.ை اس۔ ; தன - 'ஸ்கிரிப்ட் எப்படிஸார் இருக்கு” என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள். 'இதுக்கு பேரு ஸ்கிரிப்டா? கதையே இல்ல. வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற பேர்ல சம்போக கோர்வை. சீச்சி. இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க” "டு லேட் வார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க." "நான் பணமும் தாரேன், ஸ்கிரிப்டும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள நீங்க படித்ததில்லையா?” ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை அக்கெளன்டன்டிடம் சொன்னார்கள். அவன் கத்துவான் என்று எதிர்பார்த்தார்கள், அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள். “கந்தரம் எப்படிடா உன்னால கோபப்படாம இருக்க முடியுது” "சேல்ஸ் மானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கணும?” அக்கெளன்டன்ட், தான் 'பெருந்தன்மையானவன்' என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப்பட்டான். இதுபோல்,