பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 க. சமுத்திரம் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் “ஹம்பிள் பிரைட்" (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய், அவர்களை உட்காரச் சொன்னான். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து, ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவங்கினான். "என்ன விஷயம்? “வந்து வார். நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்தப் போறோம்". மானேஜர் சதாசிவம் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவணிர் களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்திற்கு அவன் எழுதியதை அப்படியே பிரகரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதி இருக்கிறான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள், அவனிடம் 'ஸ்கிரிப்ட் கேட்க வந்திருக்கிறார்கள் போலிருக்கு. வெளிகுட் வந்தவர்கள் 'ஸ்கிரிப்டை விட்டு விட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், வாய்விட்டே கேட்டான். "டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதுறது". "நம்ம அக்கெளன்டன்ட் கந்தரம்தான் ஸ்ார். நீங்க தலைமை தாங்கணும்'. "நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்.” ஊழியர்கள், கத்தரகுதிடம் விவரத்துை சொன்னார்கன். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன்போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.