பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு 123 மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஒடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆகவாசப்படுத்திய அவர்கள், வெளியே வந்து கந்தரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை. இதற்குள், அந்தச் இளம்பெண் ஒடிவிட்டாள். ஒரேயடியாய் ஒடுவதுபோல் ஓடிவிட்டாள். மானேஜிங் டைரக்டர் மதனகோபாலும் குலுங்கினார். சாம்பசிவம், கந்தரத்தைப் பற்றியும், கந்தரம் சாம்பசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர் அவன் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். கந்தரம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது. 'ஆக்ஷன் எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அக்கெளன்டன்டும் பீலர்ஸ் விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர், இறுதியில் இருவருக்குமே 'மெமோ கொடுத்தார். அக்கெளன்டன்டுக்கு 'சிவியர் மெமோ, சேல்ஸ் - மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜர்களை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று கந்தரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித 'கெடுபிடி நிலவி வந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டார்கள். அதையும் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது. ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவன், தான் ஒன்றும்