பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே பகலுக்குள் 147 அதிகாரியின் பேச்சையும், ஏச்சையும் பெருமாளால் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், அந்தக் காரால் தாங்க முடியவில்லை போல் தோன்றியது. மக்கர் செய்தது. நகர மறுத்தது. பெருமாள் காரின் முன் பக்கம் போய் திறந்துப் பார்த்தால், பேன் பெல்ட் அவுட்டு, ஒருவேளை அதிகாரி வீட்டு முன்னால் குண்டுங்குழியுமான நீர் தரையில் சிக்கியதால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். பேன் பெல்டை வாங்கித்தான் போட வேண்டும். அவர் கெஞ்சி கெஞ்சி விவரம் சொன்னார். 'போன் பெல்ட் அறுந்துட்டுங்கய்யா. புதுசா வாங்கிப் போட்டாத்தான் ஒடும்.” "இப்போ, நான் எப்படிய்யா ஆபீஸ் போறது.” "அவசரத்திற்கு தோஷசம் இல்லிங்க அய்யா. அதோ பல்லவன் பஸ் வருது... நம்ம ஆபீஸ் முன்னாலயே நிற்கும். கூட்டமும் அதிகம இல்ல. அதனால, இன்னிக்கு மட்டும் அய்யா அதுல போகலாம். மதியானத்திக்குள்ள நம்ம காரு ரெடி ஆயிடும்.” அந்த அதிகாரி, கையாட்டியதும், பல்லவனும் நின்றான். இவரோ, ராசாதி ராசகம்பீரத்தோடு,பெருமாளை எப்படிபார்ப்பரோ, அப்படி, பல்லவ ஒட்டியை பார்த்தபடியே அன்னம்போல் நடை நடந்தார். பேருந்தின் பின் முனையில் எட்டிப் பார்த்துக் கொண்டு நின்ற நடத்துனர், இப்படிக் கத்தினார். "யோவ் சாவுகிரக்கி. பெரிய கதாநாயகன்னு நெனப்போ. சீக்கரமா ஏறி தொலையேன்." குங்குமம் - 1987 ©