பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய 'வாழாத வடக்குத் தெருவில், தங்கம்மா - லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஒடு போட்ட வீடோ அல்லது காரை வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஒலமிட்டு துடிதுடித்தன. இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும் வி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவதுமகாயுத்தமாகும் இது. ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்ற பழமொழியை நம்புபவர்கள், இவர்களின் போர்முழக்கத்தைப் பார்க்கக்கூடாதுதான். மாதம் மூன்று தடவை மண்மாரியுடன் துவங்கும் அல்லது முடியும், இந்தச் சண்டையின் காரணகாரியத்தைக் கண்டுபிடிப்பவருக்கு, ஒரு டாக்டர் பட்டமே வழங்கலாம். ஆனாலும் ஐம்பது வயது ஒடிசல் ஆசாமியான "தீக்கொளுத்தி சின்னவயதில், அம்மாக்காரி, கோவில் கொடையின்போதுகூட தோசை கட்டுக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில், வீட்டுக்கூரையைத் தீயால் எரித்த பழைய மாடசாமிப் பையன்தான்.இந்த ஐம்பது வயதிலும் ஐந்து வயதுகுழந்தை உட்பட அனைவரும் ‘தீக்கொளுத்தி என்று அவருக்கு தெரியாமல் அழைக்கிறார்கள். வெளியூர் விளக்கெண்ணெய் வியாபாரியிடம் சண்டையின் சக்கையையும், சாரத்தையும் விளக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது -