பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 14.9 நாற்பத்தைந்து வயது தங்கம்மா, வீட்டுத் தொழுவத்தில் கிடந்த மாட்டுச் சாணத்தையும், வைக்கோல் கழிவுகளையும், சாணிப் பெட்டியில் வாரிப் போட்டுக் கொண்டு, அந்தப் பெட்டியோடு வடக்கு பக்கமாக உள்ள தன்னோட எருக்குழியில் போட வந்தாளாம். வந்தாளா? வந்தாள். அப்போது, புடலங்காய் உடலும், பூணிக்குருவி குரலும் கொண்ட, அதே வயது லிங்கம்மா தன் வீட்டுக்குத் தெற்குப் பக்கமாய் நின்னாளாம். காறிக் காறித் துப்பினாளாம். சட்டாம்பட்டியில் பிறவியிலேயே நெருங்கிய சொந்தக்காரியான தங்கம்மாவை ஒரக்கண்ணால் பார்த்தபடியே, அவள், தன்மீது கூடத் துப்பிக் கொண்டாளாம். அந்தச் சமயத்தில், இந்தத் தங்கம்மாவின் அருகே வாலையாட்டி நின்ற குடிமவனின் ராஜபாளைய நாய்க்கு இருமல் வந்ததாம். லிங்கம்மாவிடம் விடைபெற்ற அந்த நாய், தங்கம்மாவிடம் வந்து காறித்துப்புவதுபோல், வாயைபண்ணியதாம். உடனே இந்த தங்கம்மா, லிங்கம்மாவை ஜாடையாய்ப் பார்த்தபடியே சாடை பேசினாளாம். எப்படி? 'பய நாயி... காறித் துப்புது பாரு காறி. என்னமோ சொன்னான் கதையில... எலி ரவுக்கை கேட்டுதாம். சபையில. நீ ராசபாளையமா இருந்தாலும், நாய் நாயிதான்.” லிங்கம்மா, விடுவாளா? விடவில்லை. "யாரைப் பாத்துழா நாயின்னு சொல்லுதே நாயே..!" "நீ எதுக்குழா என்னப் பாத்து துப்புனே.” 'நீ. வாரதுக்கு முன்னே, இங்க நின்னு துப்பிக்கிட்டே இருக்கேன்... ஒனக்கு கண்ணுதான் அவிஞ்சிட்டு. காதுமா செவிடாயிட்டு.” "நான் வருவேன்னு தெரிஞ்சே. முன்னாடியே வந்து நின்னு துப்புறியா? அவ்வளவு திமிராடி உனக்கு.?”