பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 க. சமுத்திரம் "ஆமாம். நீ அழகு ராணி. ரம்ப. ரதி. நீ வருவன்னு வந்து நிக்கேன். ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.” "ஏழா ஜாக்கிரதையா பேசு. இல்லன்னா கொண்டையை அறுத்துப்புடுவேன்.” “ஒனக்கு கொண்ட போட முடியிலன்னன்னாழா இப்படி பேசறே. மொட்டச்சி. மூதேவி. பொட்டப்பய பொண்டாட்டிக்குத் திமுரப் பாரு.என்னத் திரும்பித் திரும்பிப் பாத்து.திரும்பித் திரும்பி நீ துப்புறதுக்கு. எத்தனாவது சட்டத்துலழா எடமிருக்கு? “சீ... நாய்கூட ஒன்னத் திரும்பிப்பாக்காது. நானா திரும்பிப் பாப்பேன்.” 'ஏய்... நாறப்பய பொண்டாட்டியே... நண்டுப் பய பொண்டாட்டியே. நீ இருந்த இருப்பு தெரியாதாழா. நடந்த நடப்பு மறந்துட்டாழா." "ஏடி. நீ நல்ல குலமானுன்னா. என் இருப்பச் சொல்லு. என் நடப்பச் சொல்லு.” "நான் எதுக்குழா சொல்லனும்? படியும் தராகம் ஊர்ல. கைப்புண்ணுக்கு கண்ணாடியா. ஏகேன்னானாம். எம்.ஆர்.ராதா” 'ஊர்ல வேணுமுன்னா கேட்டுப் பார்ப்போமாழா. வெங்கப்பய பொண்டாட்டியே, வேட்றபயமவளே. நான் நடந்து போற துாசில. அறுந்து போற துாசிக்கு பெறுவியாழா நீ.?” தங்கம்மா-லிங்கம்மாவின் சொற்போர், வசவுப் போராய் மாறியதைக் கண்ட,கேட்ட அக்கத்துபக்கத்துக்காரிகளும், காரர்களும், ரசனையோடு, தத்தம் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள். 'தீக்கொளுத்தி சாய்ந்து கிடிந்த முருங்கை மரத்தில், உடம்பை சாய்த்தபடியே பீடிைையக் கொளுத்தினார். இருக்கிறபோது பேச்சி