பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 15s முத்து அண்ணாச்சி என்றும், இல்லாதபோது வாலன் (அதாவது-வம்பன்) என்றும் கூப்பிடப்படும் ஒரு மனிதர் "ஏமுழா பேசிக்கிட்டே இருக்கியே. புடுச்சி பொறளுங்களா. சேவல் சண்டை மாதிரி.கோழிக் சண்டையும் நடக்கட்டும்” என்றார்குதுகலத்தோடு, வடகிழக்குமூலையில் தென்னந்தட்டியை வாசல் கதவாய்க்கொண்ட ஒலைவீட்டுத் திண்ணையில், பல சரக்கு கடை நடத்தும் பலவேசம் 'படியும் தராகம் ஊர்ல என்ற வார்த்தைகளைக்கேட்டுவிட்டு,எடுத்த தராசை இடையிலே விட்டார். மாட்டுத் தரகர் மாணிக்கம் அந்தப் பெண்களை, மாட்டுக்கு கழிபார்ப்பதுபோல் கழித்துப் பார்த்தார். வட்டிப் பணம் வசூலிக்க வந்த தெற்குத் தெரு 'பிலாங்கன் (இவர் சின்ன வயதில் சிங்கப்பூரில் இருந்தவர். இதன் தலைநகர் பிலாங்) ஒரு நிமிடம் வந்ததை மறந்தார்; வட்டியை மறந்தார். அந்த மளிகைக் கடைக்கும், இந்த எருக்குழிக்கும் இடையே இருந்த திட்டில், பீடிச்சுற்றிக் கொண்டிருந்து ஐந்தாறு பொட்டப் பிள்ளைகள் இருவர் வாய்களிலும் ஆவி பறக்க வந்த 'ஆபாச' வார்த்தைகளை கேட்க விரும்பாதவர்கள் போல், பாவலா காட்டி, காதுகளை லேசாய் பொத்திக் கொண்டார்கள். பிறகு, கொண்டை ஊசியை அட்ஜஸ்ட் செய்வதுபோல் காதுகளில் இருந்த கைகளை, தலைகளுக்கு கொண்டு வந்து, தங்கம்மா-ராசம்மாப் போரில் தாராளமாய் புரண்ட ஏராளமான வார்த்தைகளை, காதுகளில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். அதேசமயம், ஒப்புக்கு முகஞ்சுழித்து நீராவுது இந்தச் சண்டையை நிறுத்தும் என்பது மாதிரி தீக்கொளுத்தியையும் நிறுத்திடாதயும் என்பது போல வாலனையும், இரு கண்களையும் வேறு வேறாக்கிப் பார்த்தார்கள். தங்கம்மாவோ, லிங்கம்மாவோ இவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாய் தெரியவில்லை. தங்கம்மா, காதுகளில் பாம்படம் பப்படமாய் ஆட, தன்வீட்டு எல்லைக்கோடான எருக்குழியில் இருந்து, லிங்கம்மா நின்ற திசையை நோக்கி மூன்றடி முன்னேறியபடியே, திட்டிக் கொண்டு போவாள். லிங்கம்மா பதிலடி கொடுக்கும்போது, அதை சிறிது உற்றுக்