பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 க. சமுத்திரம் கேட்டுவிட்டு, பின்பு ரோஷமான பார்வை மாறாமல் நான்கடி பின்னே நடப்பாள். லிங்கம்மா கதையும் இதேதான். “கை நீட்டலாமுன்னு பாக்கியா. நீ ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தால் இந்த எருக்குழியத் தாண்டி வாழா பாக்கலாம்.” "நீ ஒருத்தனுக்கு முந்தாணி விரிச்சிருந்தா. இந்த முருங்கை மரத்த தாண்டுழா பார்க்கலாம்.” "நான் ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிக்கேன். ஒன்ன மாதிரி பல பேருக்கு விரிக்கல. ஒன் கதயக் கேட்டா. ஊரே காறித் துப்பும்.” "ஆமா... ஒரு சமயத்துல ஒருத்தனுக்குத்தான் முந்தாணி விரிப்பே.” "ஒன் புத்திக்குத்தான், ஒன்ன காஞ்சானுக்கு கொடுத்தாக." "என் புருஷன் காஞ்சான்தான். ஆனால், ஒன் வீட்டுக்காரன் மாதிரி நோஞ்சான் இல்ல.” இப்படி, இவர்கள், எருக்குழியைத் தாண்டாமலும், முருங்கை மரத்தை மீறாமலும் எச்சரிக்கையான இடைவெளியில் நின்றபடி பரதநாட்டியம் ஆடுவதுபோல் கால்களைத் தூக்கி, குச்சிபுடி ஆடுவதுபோல் கரங்களை வளைத்து, காப்ரே டான்ஸ்போல் புடவைகளைச் சுருக்கி, ரிக்கார்ட் டான்ஸ்போல் கழன்று கழன்று ஆடியபடியே வசவுப் பாணங்களை ஏவுகணையாய் எய்து கொண்டிருந்தபோது - லிங்கம்மாவின் வீட்டுக்காரார் தங்கையா எனப்படும் காஞ்சான் வயலில் கமலை அடித்துவிட்டு, காளைமாடுகளின் மூக்கணாங்கயிறுகளை சாட்டைக் கம்போடு கையில் சேர்த்துப் பிடித்தபடி, தோளில் வட்டை கமந்தபடி வந்தார். இந்தத் தங்கையா வம்பு தும்புக்குப் போகாத மனிதர் எந்தப் போரிலும், தன் மனைவியையே மட்டந்தட்டிப் பேகம் மாமனிதர். இந்தச்