பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 153 சமயத்திலும், மனைவியை அடக்கப் போனார். அந்தச் சமயத்தில் தங்கம்மா, ஒரு ஏவுகணையை எகிறி விட்டாள். "ஒன் அல்பப் புத்திக்குத்தான், ஒன் புருஷன் காஞ்சான், இருக்கிற நெலத்த ஒவ்வொண்ணா விக்கான்.... மிராசுதார் ராமகப்பு இவன நல்லா ஏமாத்துறார். எல்லாம் ஒன் புத்தியால.” “சரி. என் புத்தியால. இந்த மனுஷன் கெட்டது போதும். நீ வேணுமுன்னால் இவன வச்சுக்கிடுறியா..? வேணுமுன்னா. வாழா. து. எச்சிக்கல நாய. இரப்பாளிப் பய மவளே.” தங்கமான மனிதரான தங்கையாவால் தாங்க முடியவில்லை. "என் நெலத்தத்தான் விக்கேன். இவள் நெலத்தையா விக்கேன்.நான் மட்டுமா மிராசுதாரர்கிட்டே மாட்டிக்கிட்டேன். இவா புருஷன் மேலத்தெரு. வில்வண்டிக்காரன் கிட்டே வில்லங்கமாக நிக்கலியா? இந்தச்சாக்குல.எனக்குவாச்சவள். இவன்னு'என்னைசொல்லுதா பாரு.” தங்கையா, தனக்குக் கோபம் வந்துவிட்டதைக் காட்டும் வகையில், மாடுகளை சாட்டைக் கம்பால் அடித்தார். வட்டை துாக்கி துரே எறிந்தார். இதற்கு தங்கம்மா ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தாள்: "பொண்டாட்டிக்குப் பயந்தவன் ஒலப் பட்டய போட்டுப் போட்டு அடிச்சானாம். ஆம்புளையாம் ஆம்புளை." 'அதான் சொல்லிட்டேனே. அவர் ஆம்புளயான்னு தெரிஞ்சுக்கணுமுன்னா வாழா... கள்ளத் தாசி, புள்ளைக்கு அழுதாளாம்." தங்கம்மா-லிங்கம்மா வசவுப்போர் சென்சார் லெவலை தாண்டிவிட்டது. பீடி கற்றும் சின்னஞ் சிறுககள், நிஜமாகவே காதுகளைப்பொத்திக்கொண்டார்கள்.வாலன்'ஏழா.ஏழா. என்று