பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 க. சமுத்திரம் எச்சரித்துவிட்டு, துண்டை உதறியபடியே அங்குமிங்குமாய் நடந்தார். இதற்குள், வாய் வலித்த போராளிகள், கீழே குனிந்து குனிந்து மண்ணை அள்ளி, எதிர்த்திசையை நோக்கி வீச வீச, மண் துகள்கள், அணுத் துகள்கள் மாதிரி ஆகாயத்தை அப்பின. இந்தச் சமயத்தில், அதிகாலையிலேயே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதோரண மலைக்குப்போய், பல்வேறு மனித மிருக இடர்பாடுகளுக்கு இடையே விறகு வெட்டி, வெட்டியதைக் கட்டி, கட்டியதை தலையோடு தலையாய் கொண்டுவந்த பூவரசி. மற்போரிடும் அம்மாக்காரியான தங்கம்மாவை முறைத்தும், லிங்கம்மாவை முறைக்காமலும் பார்த்தபடியே விறகுக் கட்டை பொத்தென்றுபோட்டாள்.தலையில் சிம்மாடு போல்கருள்கருளாய் மடித்த முந்தானைச் சேலையை நேர்ப்படுத்தியபடியே முதுகுவலி யைப் போக்குபவள்போல், முதுகை முன்னாலும் பின்னாலும் ஆட்டினாள். பிறகு, இந்தச் சண்டை ஒரு பொருட்டல்ல என்பது போல், அவள் வீட்டுக்குள் போனபோது மண்ணெடுத்துக் கைவலித்த தங்கம்மா, எதிர்தரப்பு சேதி ஒன்றை இலைமறைவு காய்மறைவாய் வெளிப்படுத்தினாள்: "எங்க. அக்கா. தங்கச்சி எவளும் கள்ளப்பிள்ள கழிக்கல.” லிங்கம்மா, ராமபாணத்ததை எடுத்துவிட்டாள்: "குத்தி காட்டுறியாக்கும் குத்தி. கள்ளப் பிள்ள கழிச்ச எங்க அக்காவ... எங்கய்யா ராத்திரியோடு ராத்திரியா. தோட்டத்துல எரிச்சாரு... ஆனால், மூளி அலங்காளி மூதேவி சண்டாளி. தட்டான்கூட கொஞ்சிக்குலாவல.? இவ்வளவு நீ பேகன பிறவு. இந்த லிங்கம்மா யாருன்னு காட்டுறேன் பாரு.. மாப்பிள்ள வீட்டுக்காரங்க கிட்ட ஒன் மவள், கரெண்ட்காரன்கிட்டே ஆடுன ஆட்டத்தையும், பாடுன பாட்டையும் சினிமாவுல வாரது மாதிரி சொல்லப் போறேன். ஒன் மவள் கல்யாணத்த கருமாந்திரமாய் மாத்திக் காட்டாட்டால். என் பேர. மாத்திக் கூப்புடுழா.”