பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 155 தங்கம்மா, அதிர்ந்து போனாள். கரெண்ட் ஷாக் பட்டவள்போல், வாய் துடிக்க, கை துடிக்க, மெய் துடிக்க பதறிப் போனவளாய் கைகளை உதறினாள். லிங்கம்மாவின் கொண்டையைப் பிடித்திழுக்க நடக்கப் போனாள். கால்கள் நகரவில்லை. மண் அள்ளப் போனாள். குனிய முடியவில்லை. லிங்கம்மாவின் முகத்தை நோக்கிவிட்ட பார்வையை விலக்காமல், விலக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள். லிங்கம்மா வெற்றிப் பெருமிதத்தில் அக்கம் பக்கம் பார்த்தாள். பீடிப் பெண்கள், லிங்கம்மாவின் கடைசி அஸ்திரத்தை சகிக்க முடியாமல், பீடி இலையை ஒரு கையிலும், கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் பிடித்தபடி, லிங்கம்மாவை முறைத்தார்கள். பிறகு, ஒருத்தி அந்தப் பெண்கள் சார்பில் குரலிட்டாள்: "ஏய். விங்கம்மா சித்தி. ஒனக்கு மூள பிசகிட்டா..? முன்னப் பின்ன யோசித்துப் பேக. வீட்ல. ஆம்புளப் புள்ளங்க இருக்கிற தைரியத்துல பேசப்படாது. ஒனக்கும் இந்த வயசுலயும் ஒரு பொம்புளப் பிள்ள பிறக்கலாம். தங்கம்மா பாட்டியை என்ன வேணுமுன்னாலும் பேசு, அவா மவள. நூறாண்டுப் பயிர. ஏமுழா நாக்கு மேல பல்லுப்போட்டுப்பேசறே.?வாய் அழுவிடப்போவுது." "சரிதான்போங்கடி சண்டை துவங்கும்போதுவரமாட்டிய.? தானா முடியும்போது வருவியே. ஒங்க சங்கதியளும் எனக்குத் தெரியும்." பீடிப்பெண்கள், லிங்கம்மாவின் தாக்குதலைப் தாக்குப் பிடிக்க முடியாமல், தரையை நோக்கியபோது, இந்தத் தெருவிலி ருந்தும் கல்லூரிக்குப் படிக்கப் போகும் கனகலிங்கம், தன் வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டான். மேடைப் பேச்சாளி மாதிரி பேசினான்: ஏற்கெனவே கல்லூரி பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறுகிறவன். எல்லா மாணவர்களும், செந்தமிழில் பேசும்போது இவன் மட்டும் பேச்சுத் தமிழில் பேசுவான். இதனாலயே, இவனுக்கு வெற்றி. நாளைக்கு மறுநாளும் ஒரு பேச்சுப்போட்டி, அதை