பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 க. சமுத்திரம் ஒத்திகையாகவும், அங்குள்ள கூட்டத்தை கல்லூரி மாணவ மாணவிகளாகவும் அனுமானித்துக் கொண்டு ஒரு சிக்ஸர் அடித்தான். "உலகத்துல அவனவன், சந்திர மண்டலத்துல சஞ்சரிக்கான். 'இன்சாட்-பியைவிட்டு,இந்தியாக்காரன்கூடஎன்னவெல்லாமோ சாதிக்கான். சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணிக்கிறான். உலக மக்களே ஒன்றுபடுங்கஎன்கிறான். இந்த தெருவுல என்னடான்னா. சொந்தக்காரர்களே. நாயும் பூனையும் மாதிரி அடிக்கிறாங்க... சாகிறதுவரைக்கும் பக்கத்துவீட்டு மச்சான் பெண்டாட்டியையோ. சொந்தவீட்டு மாமியாரையோ. ஜென்ம எதிரியாய் நெனச்க செக்குமாடு மாதிரி சண்டையிலேயே கற்றிச் சுற்றி வாராளுவ. இவளுவ பொழப்பே. இந்த ஒரு தெருவுக்குள்ளே முடிஞ்சுடுது. தெக்குத் தெருவுல என்ன நடக்கு என்கிறது கூட வடக்குத் தெருக்காரிக்குத் தெரியாது. குழந்தையாய் இருக்கும்போது சின்னய்யா மவன் எதிரி. ஆளானபோது, அண்ணன் பெண்டாட்டி எதிரி. கல்யாணம் ஆன பிறகு மாமியார் எதிரி. பெண்ணெடுத்த பிறகு. மருமகள் எதிரி. சாவு எதிரியாய் வாரது வரைக்கும் இவங்களுக்கு. எதிரித்தனமே சிநேகிதமாய் போயிடுது. சாகிறவள் கூட, சாவுக்கு வருத்தப்படாம, மச்சான் பொண்டாட்டி சாகிறதுக்கு முன்னால சாக போறமேன்னுதான் வருத்தப்படுறாள். இதெல்லாம் ஒரு பொழப்பா. ஊருலயே இது கேவலமான தெருவா போச்சு. நானும். இந்தத் தெருவவிட்டு எங்கேயாவது ஒடிப் போயிடலாமான்னு பார்க்கேன்.” கல்லூரிப் பையன், தோளைக் குலுக்கி, கைகளை விரித்துக் காட்டி, கால்களை நடக்கவிடப் போனபோது, தீக்கொளுத்தி முருங்கை மரத்தில் இருந்து முதுகை எடுக்காமலே அவனை வைதார்: "ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணாய். இந்த தெருவிலேயே படிச்ச பயல் நீதான். நம்ம சொந்தக்காரங்க