பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 157 எல்லோருக்குமே நீ செல்லப்பிள்ள. நீ இப்போ சொன்னியே. உலக விஷயம். இத. இவளுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததால். இவளுவ இப்பிடி. தெருவ நாறடிப்பாளுவளாடா? இவளுவளுக்கு, நாலு எழுத்து சொல்லிக் கொடுத்தியா? நாகரீகத்தைப் பற்றித் தெரியப்படுத்தினியா? இவளுவா. திருந்துறதுக்கு நீ என்னடா செஞ்சே.? இந்த ஒண்னுந் தெரியாத மண்ணுவள. நீ நெனச்சிருந்தால் தங்கமா மாத்தியிருக்கலாம்.” தீக்கொளுத்தி, காதில் சொருகி இருந்த ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டார். அந்த சமயம், நகரப்போன கல்லூரிக்காரனை கையாட்டி தடுத்தபடியே விட்டார் ஒரு பானம். "இது போவட்டும். வட்டிக்கார தங்கபாண்டிகிட்டே நம்ம ஆளுக மாட்டிக்கிட்டு தவியாய் தவிக்காங்க. நீ இவங்களுக்கு பேங்க்ல கடன் வாங்க... ஏற்பாடு செய்தியா? கிடைக்கோ... கிடைக்கலியோ..? அது வேற விஷயம். மிராசுதாரர் சீமைச்சாமி, பெரியண்ணன்கிட்ட வெறுந் தாள்ல கையெழுத்து வாங்கி வில்லங்கம்பண்ணுனான்.கண்டிராக்டர்ராமசாமி,ஆறுமுகம் நிலத்த அடாவடியாய் எழுதி வாங்குனான். அவ்வளவு ஏன்? எங்கேயோ நடந்த களவுக்கு, ஒன்பனையேறி சித்தப்பாவபோலீஸ்காரங்க அடி அடின்னு அடிச்சி. விலங்கு போட்டுக்கொண்டு போனாங்க. நீ தட்டிக் கேட்டியாடா? பேச்சுக்குப் பேச்சு. தெக்குத் தெரு. தெக்குத் தெருன்னு. சொல்றியே. அங்கே இருக்கிற பொட்டப் பிள்ளியள. கண்ணடிக்கத தவிர. நீ வேற உருப்படியாய் என்னடா செய்தே.?” கல்லூரிப் பையன், தீக்கொளுத்தியை ஆச்சரியமாகப் பார்த்தான். அவரை அங்கீகரிப்பதுபோல், சின்னய்யா. இந்தாரும் பீடி' என்று ஒரு வண்டல் கட்டைக் கொடுத்த, 'பீடி சுற்றி' பெரியப்பா மகளை வியந்து பார்த்தான். குற்ற மனோபாவம், அவன் தலையை குனிய வைத்தது. அண்ணாச்சி... நமக்கு எதுவும் செய்யாண்டாம். கல்யாண ஆன பிறவும் இந்த தெருவுக்கு, மாதம் ஒரு தடவ வந்துட்டுப் போனால் போதும். அதுவே நமக்கு மதிப்பு