பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 க. சமுத்திரம் என்று நெகிழ்ந்து சொன்ன ஒருத்தியை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல், கவிழ்ந்து பார்த்தான். அப்புறம் பையப் பைய நடந்தான்-தெற்குத் தெருவை நோக்கி. புயலுக்குப்பின் ஏற்பட்ட அமைதி. தங்கம்மா, வீட்டுக்குள்போய் கும்பாவை எடுத்தாள், மண்யானையை மூடியிருந்த 'உல மூடியை அகற்றிவிட்டு, கும்பாவை நோக்கி பானையைச் சாய்த்தாள். சோளக்கஞ்சி, பொல பொலவென்று கும்பாவுக்குள் விழுந்தது. பிறகு, ஒரு சட்டியில் அவித்து வைத்த அகத்திக் கீரையை எடுத்து கும்பாவுக்குள் போட்டாள். நான்கைந்து மிளகாய்களை கும்பாவைப் பிடித்த கையோடு சேர்த்துக்கொண்டு, உப்புப் பெட்டியை இன்னொரு கையில் தூக்கிப் பிடித்தபடி முற்றத்தில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடி கிடந்த பூவரசியின் முன்னால் வைத்தாள். கும்பா முற்றத்துக் கல்லில் உரசிய சத்தத்தால் தன்வயமான மகளின் கண்கள், கும்பாவிற்குள் நீரை ஊற்றின. தங்கம்மா, தன்னைச் சமாளித்தபடியே, தன்மகளுக்கு ஆறுதல் கூறினாள்: 'ஏமுழா. அழுவுறே...? அந்த ஆக்கங்கெட்ட கூவை. சொன்னான்னா புலம்புற.? கழுதய விடு. பதினெட்டு வயது வரைக்கும் ஒழுங்காய்த்தான் இருந்தே. என்ன நேரமோ..? அந்த கரென்ட்காரன் மயக்கிட்டான்.” 'நீ பெத்த மவள் ஒன்னை மாதிரியே இல்லாமப் போயிட்டேனே.?” "நீ ஒரு தப்பும் பண்ணல. இந்த வயகல இது சகஜம். கரெண்ட்காரன் ஒன்னை நிசமா விரும்புறான்னு லேசாய் இடம் கொடுத்தேன்.""ஆனாலும், எப்போ அந்தப்பயல். கள்ளச்சாராயம் குடிக்கிறவன். எல்லாப் பொட்டப் பிள்ளியட்டவும் ஒன்கிட்ட ஆச வார்த்த காட்டுனது மாதிரி காட்டுறான்னு தெரிஞ்சதும் நீ விலகுன பாரு அதுதான் பெரிசு. மத்தது சிறிக...”