பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 159 "லிங்கம்மா மயினி லேகப்பட்டவள் இல்லியே." "அவளப் போயி ஏமுழா. மயினிங்கிற. சொள்ளமாடன் மேல பாரத்தைப் போட்டுட்டு கம்மாக் கிடழா. அப்படியே இந்த மாப்புள்ள போனால். இன்னொரு மாப்புள. விடு கழுதய.” தங்கம்மா, மகளைத் தட்டிக் கொடுத்தாலும், உள்ளுர உதறலோடுதான் இருந்தாள். நாலு பெரிய மனிதர்களிடம் சொல்லி லிங்கம்மாவின் கல்யாணக் கலைப்பைப் பற்றி முறையிடலமா என்றுகூட யோசித்தாள். இது, கம்மா இருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததுபோல் ஆகும் என்று அனுமானித்தாள், அமைதியிழந்தாள். லிங்கம்மா, வழக்கம்போல் காறித் துப்பும் போதெல்லாம், தங்கம்மா, தன் எச்சிலை தொண்டைக்குள் விட்டுக்கொண்டாள். அவள், சீவி சிங்காளித்து எங்கேயாவது புறப்படும் போதெல்லாம் இவள் படபடத்தாள். மாப்பிள்ளை வீட்டுக்குத் தான் போகப் போகிறாளோ என்று மயங்கினாள். போதாக்குறைக்கு, இந்த லிங்கம்மா, தன் மகனைப் பார்த்து, "பொறு பொறு. ஒன் பவுக ஒரு வாரத்துலதெரியும்.'துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி.என்கிட்டே இருக்குதுசூரிக்கத்தி. என்று தாள லயத்தோடு ஜாடை போட்டாள். தங்கம்மா, பொருமினாள். 'மாப்பிள்ளை நல்ல இடம். தங்கமான பையன். பாவி மொட்ட கெடுத்துடப்படாதே. என் செல்ல மகள் வாழ்க்கை போயிடப்படாதே." ஒருவாரம் ஒடியது. மறுவாரம் திங்கள் கிழமையாக கழுத்தை மட்டும் நீட்டியது. பூவரசி, தனக்கு வரப்போகிறவனையும், அவனை வரவிடாமல் தடுப்பதாய்ச்சபதம் போட்டலிங்கம்மா மயினியையும் ஒருசேர நினைத்தபடி, ஒய்ந்து கிடந்தாள். தங்கம்மா, வாடிப்போன மகளையே வைத்தகண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோது