பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 க. சமுத்திரம் திடுதிப்பென்று இருபது இருபத்தைந்து ஆண்களும், பெண்களும் உள்ளே வந்தார்கள். ஒவ்வொருத்தி இடுப்பிலும் கொட்டப் பெட்டி. அதன் உள்ளே நான்கைந்து கிலோ அரிசி. எல்லோரும், தாங்கள் கொண்டு வந்த அரிசியை, நெல் குத்தும் உரல் பக்கம் அம்பாரமாக்கினார்கள். இதற்குள், தீக்கொளுத்தி ஒரு வெள்ளாட்டை தலையைப் பிடித்து இழுத்தபோது,"வாலன்” அந்த ஆட்டை பின்னால் இருந்து தள்ளினார். வாலன், தங்கம்மாவை அதட்டினார். "என்ன மயினி. கப்பல் கவுந்தாலும் கன்னத்துவ கை வைக்கலாமா..? பூவரசிக்கு இன்னைக்கிசொக்காரங்க ஆக்கிப்போட வாரது தெரியாதது மாதிரி முழிக்கே? ஏழா. ராசாத்தி. முட்டாப்பய மவமவளுக்குபேர்மட்டும்பெரிசு. ஏழா.சரோஜா. ஊர்க்கிணத்துல போயி, தண்ணியெடுத்துட்டு வாங்க. ஏல ராமசுப்பு. குடிமகனை ஆட்ட அறுக்க கூட்டிட்டு வா. நான் சத்திரம் சந்தையில போயி. மஞ்சமசாலாவாங்கிட்டுவாறேன்.உம் சீக்கிரம்.ஏழா.இன்னைக்கு பீடி கத்தி கிழிச்சது போதும். குடத்தை எடுங்களா.." வாலனின் ஆணைக்குப் பயந்தும் பணிந்தும், பெண்கள் குடங்களையும், தவலைப்பானைகளையும் இடுப்பிலும் தலையிலும் போட்டபடி துள்ளி துள்ளி நடந்தார்கள். ஒருத்தி அம்மியை கழுவப் போனாள். இன்னொருத்தி அரிசியைப் புடைக்கப் போனாள். ஆலமரம்போல் கிளைவிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பங்காளி களான சொக்காரர்கள், வழக்கப்படி, தங்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகப்போகிற பெண்ணுக்கு ஆக்கிப் போடுவார்கள். அதாவது, தத்தம் வீட்டில் இருந்து அரிசி கொண்டு வந்து, கூட்டாக ஆடு வாங்கி அறுத்து, மொத்தமாகச் சாப்பிடுவார்கள். கடந்த பத்து நாட்களாய் தனிமைப்பட்டுக் கிடந்த தங்கம்மா, கூட்டத்தை பாசத்தோடு பார்த்தாள்..பிறகு அந்தக்கூட்டத்தில்,"பாவி மொட்டை"லிங்கம்மா இருக்காளா என்றுநோட்டம் விட்டாள். கண்