பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டைக் குமிழிகள் 16] வலித்ததுதான் மிச்சம். அவள் வராதது, தங்கம்மாவின் அதிர்ச்சியை அதிகமாக்கியது. வாலனை, அர்த்தபுஷ்டியாகப் பார்த்தாள். வாலன், பொதுப்படையாகப் பேகவதுபோல், குறிப்பாய்ப் பேசினார். "எந்த நாயி சந்தைக்குக் போனால் உனக்கென்ன மயினி..? வந்தால் வாராள், வராட்டால் போறாள். அன்னைக்கு அவள் சபதம் போட்டதைப் பற்றி யோசிக்கியளா.. அப்படி அவள் சொன்னதை செய்தாள்னா. அவள் குடலை உருவி தோள் மாலையா போட்டுட மாட்டனா..? கவலைப்படாதிய ஏழா. செல்லக்கணி! வாடாப்பூ கல்யாணப் பெண். வார ஞாயிறுல கல்யாணம். அவள ஏமுழா அடுப்புப் பக்கம் அனுப்புற? ஆக்கிக் போடவந்த லட்சணத்தப் பாரு. நீங்க, ஏன் மயினி கவலைப்படுதிய..? அவள் வராட்டால், நாம அவ வீட்டு. எட்டுக்கோ. எழவுக்கோ போவமாட்டோம். கரென்ட் கனைக்சன சொன்னான்னா. குடலை உருவி.” வாலன், லிங்கம்மாவின் குடலை உருவி தோள் மாலை போட்டால், தங்கம்மாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது கரென்ட்காரன்- வாடாப்பூ காதல் விவகாரத்தை எட்டு ஊருக்கு தம்பட்டம் அடிக்கது மாதிரி ஆயிடுமே. இந்த நொறுங்குவான் வாலன், கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன்னு சொல்ல மாட்டக்கானே. அந்த தட்டுகெட்ட லிங்கம்மா குடல் யாருக்கு வேணு? இப்பவே நான் பெத்த பொண்ணு. ராத்திரியில திடீர்னு எழுந்து உட்காருறாள். பரக்கப் பரக்க விழிக்காள். பையப் பயைய அழுவுறாள். இந்த தட்டுக்கெட்ட முண்டயால, கல்யாணம் நின்னுட்டால், என் செல்ல மகள் ஆத்துலயோ. குளத்துலயோ.. அரைமுழக் கயித்துலயோ. தங்கம்மா, முக்கைச் சிந்தியபோது - லிங்கம்மா, இடுப்பில் வலது கை கற்றிப்பிடித்த, கொட்ட பெட்டியில் அரிசி குலுங்க, இடது கை கற்றிப்பிடித்த பெரிய விறகு கட்டோடு உள்ளே வந்தாள். விறகுக் கட்டை பொத்தென்று