பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 69 "யோவ் கந்தா, பெட்ரோல் போட்டுட்டியா?” "நேற்று நைட்லயே போட்டுட்டேன் சார்." "குட். சில டிரைவருங்க புறப்படும் போதுதான் தும்மல் வாரது மாதிரி பெட்ரோல் பங்க பார்த்து விடுவாங்க. அப்புறம் நாளைக்கு நான் சொன்னது?” 'மறக்க மாட்டேங்க... காலையிலேயே அம்மாவையும் பிள்ளிங்களையும் முருகன் கோயிலுக்கு." "யோவ். ஏன்யா பராக்குப் பாக்கீங்க... ஜீப்புல ஏறுங்களேன்.யா.” அந்த அதிகாரி, டிரைவரிடம் பெட்ரோல் பற்றிக்கேட்டபோது அக்கறைகாட்டாமல் நின்றுவிட்டு, அம்மாவையும்பிள்ளிங்களையும் அரசு ஜீப்பில் ஏற்றும் செயல்திட்டம் பற்றி அதிகமாய்த் தெரிந்து கொள்ள அந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் சிறிது நெருங்கி நின்றது, அவருக்குப் பிடிக்க வில்லை. ஆகையால், அவர் குரலி ட்டதும், அவர்களும் அவர்சொல்வதைபயபக்தியோடுகேட்பதுபோல் பாவலா செய்துகொண்டு, பின்பக்கமாக ஜீப்பில் ஏறினார்கள். ஆனாலும், அவர்கள் கண்கள் என்னமோ இன்னும் அதிகாரி-டிரைவர் உரையாடலில்தான் நிலைகொண்டது. ஜூனியர்கள் ஒருவர் கண்ணில் ஒருவர் முகம் படும்படி, கண்ணடித்துக் கொண்டார்கள். இதற்குள், டிரைவர் கந்தன், ஜீப்பை உரும வைத்தான். ஆனாலும் அவனிடம் பேச்சுக் கொடுத்த அந்த அதிகாரி, இன்னும் அதில் ஏறாமல், வெற்றிலை பாக்குக் கடையில் "ஊதிக் கொண்டு வந்த அடுத்த கெஜடட் அதிகாரிக்கு காத்திருப்பவர் போல் நின்றார். இந்தக் காத்திருத்தலுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. எந்த அரசு ஜீப்பிலும் ஜன்னலோர இருக்கையில் சீனியர் அதிகாரி உட்காருவார். அவருக்கும், டிரைவருக்கும் மத்தியில் ஜூனியர் உட்காரவேண்டும்.கடையிலிருந்துவருகிறவரும், கிடையில் நிற்பது