பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு அவர்கள், அம்பாசிடர் காரில் போகுமளவிற்கு கிளாஸ் ஒன்' அதிகாரிகளும் அல்ல. அதே சமயம் அரசாங்க சைக்கிள்களில் சவாரி செய்யும் கிளாஸ் போர் ஊழியர்களும் இல்லை. அதோ அந்த அலுவலகம் முன்னால் நிற்கும் ஜீப்பில் ஏறக்கூடிய கெஜட்டட் அதிகாரிகள். இந்த வகையில் இரண்டுபேர். இவர்களுக்கு ஒத்துாதும் உதவியாளர்கள் இருவர். ஜூனியர் அஸிஸ்டென்ட்களோ அல்லது அஸிஸ்டென்ட் ஜூனியர்களோ. இன்னொருத்தர் காக்கி பாண்ட் காக்கி சட்டை வாலிபன். யூனியாரமாக அதை போட்டிருந்தானா, அல்லது அதுதான் அவன் ஆடையா என்பது அவனுக்கே தெரியாது. எல்லோரும் படியிறங்கி வந்து அந்த ஜீப்பையே மொய்த்தார்கள். காக்கிச் சட்டை வாலிபன் மட்டும் டிரைவர் இருக்கைப் பக்கம் நின்று ஸ்டியரிங்கை துடைத்துக் கொண்டு இருந்தான். அவர்கள் பேச்சு நிற்காது என்பது அறிந்தவன் போல் ஒரு துணியை எடுத்து இருக்கையை துடைத்தான். பிறகு ஜீப்பின் மோவாயை ஒரு தட்டுத் தட்டிப் பார்த்தான். டயர்களை ஒரு அமுக்கு அமுக்கிப் பார்த்தான். இதற்குள் கெஜட்டட் அதிகாரிகளில் ஒருவர் அருகே தெரிந்த வெற்றிலை பாக்குக் கடையை நோக்கி நடந்தார். உயரம் குறைவு. உடல் சதை அதிகம். நடையோ நாட்டியம். ஜீப் அருகே நின்ற இன்னொருத்தர் உயரமும், சதையும் ஒரே வாகில் அமைந்தவர். ஆட்களை அமுக்கிப் பார்க்கும் கண்காரர். கடையைப் பார்த்துப் போன கண்களை, காக்கிச் சட்டை வாலிபன் பக்கம் திருப்பிவிட்டுக் கேட்டார்: