பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர மாடன் 67 பரமசிவம், மனைவியோடு போய்விட்டார். சுதந்திரமாடனுக்கு, ரத்தம் உறைவது போலிருந்தது. இருமல்கூட, அவனுக்குப் பயப்பட்டு சிறிது விலகியது. 'சாமக் கோழி கூவியது. புதிய வேலைக்காரப் பையனிடம், பரமசிவம் பேசுவது அவனுக்குக் கேட்டது. 'ஏய். ராசதுரை. எழுந்திரு ராசா. மாட்டுக்கு தண்ணி காட்டு. வயலுக்கு ஜாக்கிரதையா போடா... இல்லன்னா - கொஞ்சநேரம் தூங்கு. முடியாட்டா தூக்கக் கலக்கம் போறதுக்கு. காத்தமுத்து கடையில ஒரு டீ குடிச்சிட்டுப்போ. வெறும் டீ ஆகாது. ஒரு மசால்வடையும் தின்னு. இந்தா காசு. எழுந்திரு. ராஜா. மாடு, ஒன்னையே பாக்குது பாரு...” சுதந்திரமாடன், ஒரு முடிவுக்கு வந்தான். பரமசிவத்தின், சாப்பாட்டுக்குள் சாப்பாடாகப்போகும் அந்த, பையனிடம் தன் கதையை பக்குவமாகச் சொல்லி, அவனை மீட்கவேண்டும். அப்புறம், தான் அலட்சியப்படுத்திய சக விவசாயத் தொழிலாளிகளின் இடத்திற்குப் போகவேண்டும். 'என்னைப்போல் ஆகாமல் இருக்க என்ன வழி. என்று கேட்க வேண்டும். அதற்கு, ஏதாவது செய்தாக வேண்டும். அப்புறம். இருமல் விட்ட வழி. தாமரை, ஆகஸ்ட் -1979 ©