பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 க. சமுத்திரம் ரத்தம் என்ற கத்தல்கள். எனக்குச் சீக்கிரமா சாவு வரமாட்டங்கே: என்ற புலம்பல்கள். இருபதாண்டு கால உழைப்புக்கு, ஒரேயடியாய் ஒய்வெடுக்கும் இயலாமைப் பெருமூச்சு. இதுதான் உலகமா என்ற ஆதங்கம்.எல்லா இடத்துலயும் ஏழைகள் கறிவேப்பிலைகளோ என்ற இருமலுகளுக்கிடையே தோன்றிய ஆராய்ச்சி. சுதந்திர மாடன் இருமினான். யானை பிளிறுவதுபோல் இருமினான். ஆந்தையின் மரண ஒலத்தைப்போல் இழுத்துக் கொண்டே இருமினான். பாம்பு வாயில் அகப்பட்ட சாகாத தவளைபோல் - பல்லியிடம் சிக்கிய பூச்சிபோல், இருமலில் சிக்கி, ரத்தஞ் சொட்டச் சொட்ட கக்கி, இருமியபோது - பரமசிவம், வந்தார். படுத்திருந்த கோலத்தோடு வந்தார். "என்னடா. ஒன் மனகல என்ன...நெனப்பு. நாங்கெல்லாம் துங்கணுமா..? வேண்டாமா..? திருமதி. பரமசிவம், வந்தாள். 'எல்லாம் நீரு கொடுத்த இளக்காரம். நாம துாங்கக் கூடாதுன்னு வார பாசாங்கு இருமலு. நாயக் குளிப்பாட்டி நடுவிட்ஸ் வச்சகத. நம்ம வீட்டுக்கும் வந்துட்டு.” சுதந்திரமாடன், பரமசிவத்தைப் பார்த்தான். நாளைக்கு வருஷப் பிறப்பு. சொல்லிட வேண்டியதுதான். 'மாமா, என்னால முடியல... நாளையிலே இருந்து நின்னுடுறேன். ஒம்ம கையால. ஒரு வெத்துல பாக்கு கடைவச்சிக் கொடுக்கணும். என் கணக்கப் பார்க்கணும்.” “பொல்லாத கணக்கு. ஒம்மா சாவும்போது, முந்நூறு கொடுத்தேன். அந்த முந்நூறு இப்போ மூவாயிரம் ரூபா மாதிரி. நாளைக்கு கணக்குப் பார்க்கலாம். யாரு யாருக்கு கொடுக்கணும் என்கிறதை. காலையில பேசிக்கலாம். ஒன் பணத்துல, ஒரு பைசா வேண்டாம்.”