பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர மாடன் 65 கரையான் அரித்த பூவரசு மரம்போல் ஆகியது. நெஞ்செலும்புகள் வெளியே வரத் துடித்தன. கண்கள், உள்ளேபோக முயன்றன. இருமும்போது, லேசாக ரத்தம் வரத் துவங்கியது. ஆரம்பத்திலேயே கவனிச்சிருக்கலாம். இனிமேல் பார்த்தால், ஆயிரம் ரூபாய்க்கு மேல. ஆகுமே...' என்று யோசித்த பரமசிவம், தற்செயலாக வெளியூரில் இருந்து வந்த, இன்னொரு பன்னிரண்டு வயது அனாதைப் பயலை, வீட்டுக்குக் கொண்டு வந்து, விளக்கேற்றச் சொன்னதுடன், சுதந்திரமாடனை, விடவும் முடியாமல், தொடவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், அவன் விலகுவதற்கான் சூழ்நிலைகளை உருவாகினார். சுதந்திரமாடன் கண்ணெதிரிலேயே, புது வேலைகாரப் பையனை, மிளகாய் மூட்டைகளை விற்கச் சொன்னார். "பிரியாணி சாப்பிட்டுட்டு வாடா..” என்றார்; கொஞ்சினார்; குவாவினார். போதாக்குறைக்கு மாடனைப் பார்த்து, 'நாலு எருமை மாடு வாங்கித்தாரேன்.மேய்க்கியா..?” என்றார். அவரது தர்ம பத்தினியும், "இப்படியே இருமுனா எப்படி. மாடு முட்டுன சாக்குல, வயலுக்கு போகாட்டா என்ன அர்த்தம்..? பாசாங்குக்கும் அளவு வேணாமா..? என்றாள். பழைய சுதந்திரக் கோளாறில் அல்லது உரிமையில், கல்லூரிக்காரனை, கிருஷ்ணா. இந்த சட்டை ஒனக்கு நல்லா இல்லடா...' என்று சுதந்திர மாடன் கேட்டபோது, 'நான், ஒன்னமாதிரி,வேலைக்காரனா.கண்டதப்போடுறதுக்கு." என்றான் அந்த கிருஷ்ணன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பரமசிவம், லேசாகச் சிரித்தார். லேசாத்தான். சுதந்திரமாடன், இந்த முப்பத்திரண்டாவது வயதில், மனைவி வேண்டும், மனை வேண்டும் என்று நினைக்காமல், 'உழைப்பு. உழைப்பு...' என்று சொல்லாமல் செயலில் காட்டியவன், இன்றும் இருமிக் கொண்டிருந்தான். குடலை, வாய்க்குக் கொண்டுவரும் இருமல், வெள்ளைச் சளி, குங்கும எச்சில்."எம்மா.எம்மா...' என்ற வார்த்தைப்பிளிறல்கள்."எனக்காம்மா