பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. க. சமுத்திரம் சென்ற பொங்கலின்போது, இரவே பொங்கவிட்டு, பூஜை செய்துவிட்டு, "இன்னைக்குமாடா வயலுக்கு?” என்று சொன்ன பரமசிவத்தை கண்களால் எரித்துவிட்டு, வேலைக்குப் போனான். மறுநாள், மாட்டுப்பொங்கல். உழவு மாடுகளை,தொழுவில் இருந்து அவிழ்த்து, புண்ணாக்கு கலந்ததொட்டியில்,'தண்ணிகாட்டிவிட்டு, அவற்றைக் குளிப்பாட்ட குளத்துக்குக் கொண்டு போனான். ஒரு மாட்டைக் குளிப்பாட்டியபோது, அது தற்செயலாகவோ அல்லது கூச்சத்தாலோ திமிர, அதன் கொம்பு, விலாவில் பட்டு, இருபது அடிக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டான். ரத்தமில்லாத ஊமைக்காயம். பிராணனைப் பிடுங்கும் வலி, பரமசிவம், பதைபதைத்தார். அவர் மனைவி, படபடத்தாள். அயோடக்ஸ்’ போட்டார்கள். அய்யய்யோ என்றார்கள். இதப் போயி பெரிசா.: என்றான் மாடன். நாளாக நாளாக, சுதந்திரமாடன் இருமத் துவங்கினான். வர்மப்பிடி என்றார்கள். அவனால், வேலைகளைச் செய்ய முடியவில்லை. எழுந்தால், களுக்குப் பிடித்தது. உட்கார்ந்தால், மூச்சு முட்டியது. அவனால், வழக்கம்போல் அதிகாலையில் எழ முடியவில்லை. மிளகாய் மூட்டைகளை, துக்கவே முடியவில்லை. முதல் தடவையாக, பரமசிவத்திடம், தயங்கிக் கொண்டே வந்து, தலையைச் சொறிந்துகொண்டே"உடம்புக்குள்ள... எலும்பு முறிஞ்சிருக்கலாம். இல்லன்னா, நரம்பு பிசகி இருக்கலாமாம். போட்டோ எடுத்து பார்க்கலாமா..?” என்றான். பரமசிவம், அவனைச் சினந்து பார்த்துக் கொண்டே, "அதெல்லாம் ஒண்ணுமிருக்காது. ஒன் மனகல தான் பீதி. சரியாயிடும்..” என்றார். சரியாகவில்லை. கதந்திரமாடனின் இருமல், நாட்டின் பிரச்சினைகள்போல், நாளுக்கு நாள் வளர்ந்தது. வைரம் பாய்ந்த அவன் உடம்பு,