பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர மாடன் 63 பரமசிவம், அனல் பிழம்பாக எழுந்தார். மகனை, அடிக்கப்போன அவரை, மாடனே தடுத்தான். ஆனால், அவர் பேச்சைத் தடுக்கவில்லை. “என்னல. வேலக்காரன். கீலக்காரன்னுபேகற.பைத்தியம் பிடிச்கட்டால...? யார்ல. வேலைக்காரன்? ஒன்னை. நான் பெத்ததுனால. இந்த வீட்ல வச்சிருக்கேன். இவன் பெறாம, பெத்தப் பிள்ள. இவனயால, வேலைக்காரன்னு சொல்றே.? எங்க. இன்னொரு தடவை சொல்லுல பார்க்கலாம். குடல உருவி, தோள்மலயா போடுறனா இல்லியான்னு பாரு. எல்லாம் இந்தச் செறுக்கி மவள். கொடுக்கிற இளக்காரம். ஒன்னெலலாம், பிறகும்போதே வாயில நெல்லப்போட்டு கொன்னுருக்கணும்.” "செறுக்கி மவளான" அவர் மனைவி, 'இன்றிருப்பார், நேற்றில்லை.நேற்றிருப்பார் இன்றில்லை. இப்படி இருக்கையில.. வேலக்காரன்னு நாக்குமேல பல்லப் போட்டுச் பேசலாமடா. நீ. படிச்சவனாக்கும். மூக்காலமும் காக்கா, முழுவிக் குளிச்சாலும், அது கொக்காயிடுமா..? ஒய்யாவோட. அல்பத்தனமதானே ஒனக்கு வரும்.?” என்றாள். அன்று, பாசத்தால் விம்மிய சுதந்திரமாடன், இப்போதும் விம்மிக் கொண்டிருக்கிறான். பரமசிவத்தின் வீட்டையே, பாரதத் திருநாடாகக் கருதி, எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்ததாக கருதிய இதே சுதந்திரமாடன், இப்போது, எருமை மாட்டுக் கொட்டடிக்கருகே, கொசுக்கள் அரிக்க, 'லொக் லொக்' என்று இருமிக் கொண்டிருக்கிறான். நாளைக்கு, வருடப் பிறப்பு. எப்படியும் பரமசிவ மாமாவிடம் பக்குவமாகச் சொல்லிவிட வேண்டும். இனிமேல் இந்த வீட்டில் இருக்கமுடியாது. இருக்கக் கூடாது. நடந்ததை நினைத்தான்.