பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 க. சமுத்திரம் சிங்கிள் டியை, மசால்வடையின் துணையில்லாமல் குடித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்ததும், பரமசிவம் கோபப்பட்டார்; சினந்தார், சீறினார்; எகிறினார். 'வெறும் உயைக் குடிச்சால்... உடம்பு என்னத்துக்குல ஆகும்? போயி வைரமுத்துக் கடையில... பிரியாணி சாப்புடுறதுக்கு என்னல..? என் பணம் வேற. உன் பணம் வேறயால. போல. போயி பிரியாணி சாப்புடுல. வேணுமுன்னா, ஒரு ஆம்லேட்டும். சாப்புடு. டி குடிக்கானாம் டீ.” இதேபோல், இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரிக்காரன், வாத்தியரம்மாவான பத்மா, ஆகியோருக்கு உடன்பிறப்பாய், அறுபது வயது பரமசிவத்திற்கு, ஐந்தாண்டுக்கு முன்பு பிறந்த ஒருபொடியன், அவர் மனைவி ஆகியோர்எல்லோரும் கோரம் பாயில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுதந்திரமாடனும், அவர்களோடு, உட்கார்ந்து உணவருந்தினான். கல்லூரிக்காரன், "மாடா கொஞ்சம் உப்பு எடுத்துக்கிட்டு வா.” என்றான். உடனே, நமது மாடன், "காலு ஒடிஞ்சா போயிட்டு போடா. உப்பு எடுத்துக்கிட்டுவாரகையோட எனக்குத் தணணியும் கொண்டுவா..” என்றான். பரமசிவம், சிரித்தார். பத்மா, புன்னகைத் தாள். பல சினிமாப் படங்களில், குணசித்திர வேலைக்காரர்கள் 'எசமான். எசமான். உங்க உப்பத் திங்கிற நாயி. நான். என்று நெளிந்து, குழைந்து, ஒரளவு விலகி, வினயமாய்ப்பேகம் காட்சிகளை, கதாநாயகத் தோரணையில் கண்டுகளித்த கல்லூரிக்காரன், கதந்திரமாடனின் போக்கை அதிகபட்சமாகக் கருதி, வார்த்தைகளை ஏவிவிட்டாள். 'மாடா..! நீ வேலைக்காரன் எங்கிறதை மறந்துடாது. எதுக்கும் ஒரு அளவு வேணும். எல்லாம் இவங்க. கொடுக்கிற இளக்காரம். நரிக்கு. நாட்டாம கொடுத்தால்.” அவ்வளவுதான்.