பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திர மாடன் 6] அவள் ஒருதடவை, பரமசிவம், நான்கு மூட்டை கத்தரிக்காய்களை விலைபேசி, அட்வான்ஸ் வாங்கிவிட்டார். அப்போதுதான் வயலில், இருந்துவந்த சுதந்திரமாடன், "கொஞ்சமாவது முன்ன பின்ன யோசித்து பாாத்தீரா..? மூட்டை எட்டு ருபாயா இருக்கையில. ஆறு ரூபாய்க்குக் கொடுக்கிறதா. அதெல்லாம் முடியாது...” என்று சொல்வி, வியாபாரியின் வேலையாட்கள் முதுகுகளில், பரமசிவம் ஏற்றிய மூட்டைகளை, இறக்கி வைத்தான். பத்மாவுக்கு, பக்கத்து ஊரில் இருந்துவந்த ஒரு வரனுக்கு பரமசிவம் சம்மதித்தபோது,"யாரு, அந்த முட்டக்கண்ணுப் பயலுக்கா..? ஆலம்பழத்த, அண்டங்காக்கா கொத்துறதா..?” என்று முறியடித்தான். பரமசிவம், பயலுக்கும், தன் மகளுக்கும் இஸ்கு - தெஸ்கு இருக்குமோ என்று சந்தேகப் பட்டபோது, 'என் தங்கச்சிக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணுமுன்னு. எனக்குத்தான் தெரியும். ஒம்ம பாட்டுக்கு கிடயும்.” என்றான். மொத்தத்தில், அந்த வீட்டின் நிர்வாகமே அவன் கையில். வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரம். வயலில், எந்தப் பயிரையும் விளைவிக்க கதந்திரம். எதையும் விற்கச் சுதந்திரம், எந்த யோசைனையும் சொல்லச் சுதந்திரம். எங்கும் சுதந்திரம். எல்லாவற்றிலும் சுதந்திரம். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! என்ற பாரதி பாட்டுக்கு நாயகனாய் விளங்கும் அளவுக்கு, அளவற்ற சுதந்திரம். பரமசிவத்தையும், கம்மாச் சொல்லக்கூடாது. சுதந்திர மாடனின் பேச்சு சுதந்திரத்திற்கு, செயல் கதந்திரத்திற்கு, வீட்டு சாசனத்தில் உத்திரவாதம் அளித்துவிட்டார். அவனுடைய, உடல் நலத்தில், அவனைவிட அதிக அக்கறை செலுத்தினார். ஒருதடவை, சந்தையில், தக்காளி மூட்டைகளை விற்றுவிட்டு, பெற்ற பணத்தில் நோட்டுக்களை, மடிச்சீலைக்குள் வைத்துவிட்டு, சில்லறை நாணயங்களை, கைகளில் வைத்துக் குலுக்கிக் கொண்டே, ஒரு