பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க. சமுத்திரம் 'நாட்டில் ஒருமைப்பாடு நிலவவேண்டும்; நிலவப்பட வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாக, கிராமத்து மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட வேண்டும்' என்றும், ஊரில் பரமசிவத்தின், ரைஸ்மில்லை திறந்து வைத்து, உணவு அமைச்சர் பேசியதை, கதந்திர நாளில் பிறந்த மாடன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அம்மா இறந்த துக்கத்தை, பரமசிவத்தின் மனைவியை 'அம்மா என்றழைத்து மறந்தான். அவளும், "அட கட்டையில போற மவனேன்னு" சொல்வதை, ஒரு தாயின் கரிசனமாக எடுத்துக்கொண்டு, "போற பய மவனுன்னு, சொல்லாதிய. எங்கய்யா, போயிட்டதால... போன பய மவனேன்னு சொல்லணும்..” என்று சொன்னபோது, திருமதி பரமசிவம், பய மவனுக்கு. வாயப் பாரு...” என்று சிரிப்பாள். நாட்டில் ஒருமைப்பாடு ஏற்பட்டதோ இல்லையோ, கதந்திரமாடன் பரமசிவக் குடும்பத்துடன் ஐக்கியமானான். சமயலறை வரைக்கும் இவன் சாம்ராஜ்யம். வீட்டில் ஆள் இல்லையென்றால், இவனே பானையைத் திறந்து, சாப்பாடு போட்டுக் கொள்ளலாம். மிளகாய் வத்தல் மூட்டைகளை, இவனே வண்டியில் ஏற்றி, சந்தைக்கு கொண்டுபோய் விற்கலாம். விற்ற பணத்தில், இவனே, பரமசிவத்துக்கு எட்டுமுழ வேஷ்டி வாங்கி வரலாம். இவனே சந்தையில், 'மஞ்சள் மசலாக்களையும்' வட்டுகளையும் வாங்கி வரலாம். பரமசிவத்தின் மகள் - செகண்டரி கிரேட் வாத்தியார் டிரெயினிங் படிக்கும் பத்மாவை, இவன்தான், திருநெல்வேலியில் கொண்டு போய் விடுவான். அவள்கூட, இவன் மூவந்தான், தன் பிரச்சினைகளை அம்மாவிடம் சேரும்படிச் செய்வாள். கல்லூரியில் படிப்பதாகக் கருதப்படும் பகிருஷ்ணன், இவனைச்சரிக்கட்டித்தான், அப்பாவிடம் மோசடிப் பணத்தை வாங்கப் பார்ப்பான், தன் காதலுக்குக்கூட, இவனைத்தான் நம்பி இருக்கிறான்.