பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதந்திர மாடன் 59 கறி வாங்கி, இந்தப் பயகிட்ட கொடு. வீட்ல போயி. அம்மாவ, ஆட்டுக்கறி வைக்கச் சொல்லி, சாப்புடுல. அப்புறம் அடுத்த விஷயத்த யோசிக்கலாம். நல்லாச் சாப்புடு. ஏமுல. பட்டினி கிடக்க...? உன் வயித்தப் பார்த்தால், என் வயிற என்னவோ பண்ணுது.” ஆட்டுக்கறி சாப்பிட்ட சுதந்திர மாடன், அம்மாவின் ஆலோசனையை மீறி - அடிக்கப்போன அவளை, எதிர்த்து அடிக்கப் போனான். பிறகு இப்படி வார்த்தைகளை வீசிப் போட்டான். "இனிமேல். வயலுல நடுறதுக்கு போனியான்னா, செறுக்கி மவளே கொன்னுப்புடுவேன். இன்னயில இருந்து, நான் வேலக்கி. போறேன். ஆட்டுக்கறி வாங்கி வருவேன். சமையல் பண்ணனும், நான் ஊட்டுறபோது, வாயைத் திறக்கணும். இல்லன்னா... கொன்னுப்புடுவேன். அதுவும் இல்லன்னா. பட்டணத்துக்கு ஒடிப் போயிடுவேன். மசால் வடையை, ரெண்டு நாளா. ஏன் திங்கமா வச்சிருக்க..? திங்கிறியா? பம்பாய்க்கு ஒடிப் போவட்டுமா..? மங்கம்மா, அவன் ஒடிப்போகாமல் இருக்க, அழுத வாய்க்குள் மசால்வடையை வைத்தாள்.மற்ற பையன்களைப்போல், தன் மகனும் படித்து, வாத்தியாராகி, 'இஸ்திரி போட்ட சட்டையோடு, இன்னொரு வாத்திச்சியைக் கல்யாணம் பண்ணி, ககமாக வாழவேண்டும் என்று நினைத்த அந்தத் தாய், இப்போது மகன் எப்படியோ இந்த ஊரில் வாழ்ந்தால் சரிதான் என்று நினைத்தான், ஒரே பிள்ளை, கண்ணுக்கு முன்னாலேயே இருக்கவேண்டும் என்று எண்ணியும், தொண்டைக்குள் விக்கிய மசால்வடைத் துண்டுகளை, தண்ணிரைக் குடித்து வயிற்றுக்குள் அனுப்பினாள். சுதந்திரமாடன், பரமசிவத்தின் வீட்டிற்குத் துள்ளிக் குதித்துப் போனான். ஆண்டுகள் போய்க்கொண்டிருந்தன. மங்கம்மாவின் உடம்பும், உயிரும் பிரிந்ததை பொருட்படுத்தாமல் போய்க் கொண்டிருந்தன.