பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 க. சமுத்திரம் "நான், என்ன மாமா செய்யணும்.? "ஊர்ல. எல்லாரும்படிச்சிட்டு டவுனுக்குப்போயிட்டா.நம்ம ஊர் என்னாவுறது? ஒன்னமாதிரிபுத்திசாலிப்பயலுவளுக்கே புரிய மாட்டக்கே. அப்புறம் வேற எவனுக்கு புரியப் போவுது..? "நான் என்ன மாமா செய்யனும்.? "நம்ம நாட்டுக்கு இப்போதேவை உழைப்பு. நம்ம தலைவரு சொன்னது மாதிரி, நாம் உற்பத்தியப் பெருக்கணும். உணவு. ஏற்றுமதியாகணும். அதுக்கு. சுதந்திர நாள்ல பிறந்த ஒன் பங்கு என்னடா. சொல்லு பார்ப்போம்.” "நல்லா படிக்கணும். வாத்தியார் சொல்றபடி நடக்கணும். தாயிற் சிறந்த கோவில் இல்லன்னு நினைக்கணும்." 'மெத்தப் படிச்சவன், கத்தப் பயித்தியக்காரன்னு ஒரு பழமொழி இருக்கு. தெரியுமால? படிச்சது போதாதா..? படிப்பு, உழைப்புக்காகவா. உழைப்பு. படிப்புக்காக. அதனால, பேசாம, ஒன்னை மாதிரி பையங்க, பேனா பிடிக்கக்கூடாது. ஏர் பிடிக்கணும். சிலேட்டுக்குப் பதிவா. உரமூட்டை தூக்கணும்.” "ஒம்ம மவன் மட்டும் படிக்கான்.” "அவன், உருப்படாடத பய. நீயும் அவனை மாதிரிகெட்டுப் போகணுமுன்னு நினைச்சா, பேஷா படி... அம்மாவுக்கு கஞ்சி ஊத்தணும். பிறந்த கிராமத்தை, முன்னுக்கு கொண்டு வரணுமுன்னா. வயலுல உழை. ஒன் இஷ்டம்.” "வயலு இல்லியே. மாமா." "அறிவிருக்காடா. என் வயல் வேற. ஒன் வயலு வேறயா?” "ώ/τωry...." "இந்தால இன்னொரு வடை, ஏய், ஜோஸப்பு நான் சொன்னேன்னு அவன் மாசானம் கசாப்புக் கடையில, அரைச் சேரு