பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர மாடன் 57 குட்டாம்பட்டியும், நாட்டோடு சேர்ந்து முன்னேறியது. அப்படி முன்னேற முன்னேற, மங்கம்மாவும், இதர ஏழைகளுடன் சேர்ந்து பின்னேறிக் கொண்டிருந்தாள். பொதுக்கூட்டங்கள், விழாக்கள், மாலைகளை நேசிக்காமல், துண்டுகளையும்' 'பொன்னாடைகளையும் நேசிக்கும் அளவுக்கு பிரமுகர்கள் முன்னேறிவிட்டதால், அவள், கூலி வேலைக்குப் போனாள்.நடவுக்கு கிடைத் எட்டனாவை வைத்துக்கொண்டு, தன்னையும், தன் மகனையும் தற்காத்துக் கொண்டிருந்தாள். அப்போது, சுதந்தர மாடன், ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மக்காச்சோளத்தை சாப்பிடும் அவனை, பெரிய இடத்துப்பையன்கள் சோத்துமாடன் என்று அழைத்தாலும், அவன், படிப்பில், வேட்டைக்குப் போகும் உதிரமாடன்போல் ஆர்வம் காட்டினான். பரமசிவம் மகன் பரீட்சைகளில் கீழே முதலாவது ஆளாகவும், இவன் மேலே முதலாவதாகவும் இருந்தபோது, விதி 'சிரசாசனம் செய்தது. பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந்த சுதந்திர மாடனைப் பார்த்த பரமசிவத்திற்கு, மனக கேட்கவில்லை. சாய்ந்து கிடந்த அவன் வயிற்றையும், அம்மாவிடம், சிலேட்டு வாங்க காக கேட்டு, கையடி பெற்றதால், கன்னத்தில் கறையாமல் நின்ற உப்புநீரையும் பார்த்த அவருக்கு,உப்புக் கடலளவு கருணைபிறந்தது. அவர், ஆள்வைத்து நடத்தும் பால் கடையில், ஒரு மசால் வடையை, அவன் கையில் திணித்தார், பயல், அவரை நன்றிப் பெருக்கோடு பார்த்தபோது, "இன்னும் வடை வேணுமா..?” என்றார். "எனக்குப் போதும். அம்மாவுக்கு. ஒண்னு வேணும்.” "இந்தா... வாங்கிக்கல. இதோ பாருல... நம்ம தலைவருங்கெல்லாம். தொழில் கல்வி வேணுமுன்னு சொல்லு தாங்க... நீ சுதந்திர நாள்ல பிறந்த பய... ஒன் பிறந்தநாள். சாதாரணமானதுல்ல. நீ கூட. தொழில் கல்வியப் பத்தி நினைக்காட்டா என்னல. அர்த்தம்?"