பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 7, குவித்தபோது, அந்த பாடாவதி ஜீப் போட்ட சப்தம் அசல் அமங்கலமாய் ஒலித்தது. எப்படியோ, அந்த ஜீப் அங்குமிங்குமாய் புதுமணப் பெண்போல் நாணிக்கோணி, மேடையாடும் ரிக்கார்டு ஆட்டக்காரிகள் போல் குதித்துக் குதித்து, மெயின் ரோட்டுக்கு வந்தது. டிரைவர் ஆக்ஸிலேட்டரை எழுவது கிலோ மீட்டருக்கு அழுத்தப் போனபோது, ஒரு வெள்ளை யூனிபார போலீஸ், வண்டிய நிறுத்தச் சொல்லி கையை குறுக்காகப் போட்டது. கந்தன் கேட்டான்: "என்ன சார்.” "துரை கீழே இறங்கிப் பேச மாட்டீங்களோ.” சிவபெருமான் கழுத்து பாம்புபோல் தன்னை நினைத்துக் கொண்ட கந்தன், அந்த கெஜட்டட் அதிகாரிகளைப் பார்த்தான். அவர்கள், அந்த வெள்ளைப் போலீஸை மிரட்டுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்களோ, அது அவன் பிரச்சனை என்பது போல் சொல்லி வைத்ததுபோல், வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களாம். 'அந்த எம்.எல்.ஏ. கலெக்டரை. அடிக்கத்தான் வந்தானாம். ஆனா அப்போ கையில கிடைச்சது ஸ்டேனாதானாம்: கந்தன், வெறுப்போடு கீழே குதித்தான். வெள்ளைப் போலீஸ், அவனை சாலையின் மறுமுனைக்கு கூட்டிப்போனது. கந்தன் கேட்டான்: "நான் என்ன சார் தப்புப் பண்ணினேன்?" "அதுகூட உனக்குத் தெரியலையா? ஜீப்போட லைட்டு கண்ணைப் பறிக்கும்படியா பிரகாசமா இருக்கப்படாதுன்னு கவர்ன்மென்டல ஒரு ஜி.ஒ. வந்திருக்கே... அதோ பார். உன் ஜீப்பை...”